அமீரகத்தில் துபாய் மற்றும் அபுதாபியைத் தொடர்ந்து ஷார்ஜாவிலும் ஷாப்பிங் திருவிழா துவங்கியிருக்கிறது. வாங்கும் பொருட்களுக்கு 75 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடித் திருவிழா பிப்ரவரி 13, 2021 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. தள்ளுபடித் திருவிழாவின் இந்தாண்டிற்கான ஸ்லோகமாக “மீண்டும் ஷாப்பிங் செய்ய வாருங்கள்” (Back to shopping) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
59 நாட்கள் நடைபெறும் இந்த தள்ளுபடிக் கொண்டாட்டத்தில் மார்கெட்கள், ஷாப்பிங் செண்டர்கள் ஆகியவற்றில் பல்வேறு வகையான ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட இருப்பதாக ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரி அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு 1 மில்லியன் திர்ஹம்ஸ் மற்றும் 7 கார்களை வெல்லும் வாய்ப்பும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் செய்ய வரும் அனைத்து நபர்களும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் பின்பற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.