ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு இன்ப ஆச்சரியமாக கூட இருக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாரிக்கும் தொகையை ஒரே குலுக்கலில் அடித்தால் இதற்கு உங்களிடம் இரண்டு இருக்க வேண்டும். ஒன்று அதிர்ஷ்டம். இன்னொன்று அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வரும் Bigticket லாட்டரி. காதலர் தினத்தினை முன்னிட்டு ஒரு பெரிய ஆஃபரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது. இதில் நீங்கள் கலந்து கொண்டால் 3 கோடி வரை உங்களால் பரிசுத்தொகை வெல்ல முடியும்.
திங்கட்கிழமை முதல் புதன் வரை, பிக் டிக்கெட் வாடிக்கையாளர்களுக்கு பெரிய வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது. இரண்டு ரேஃபிள் டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு அடுத்த மாத குலுக்கலுக்கு இரண்டு கூடுதல் டிக்கெட்டுகள் தரப்பட இருக்கிறது. அடுத்த மாதம் பெரும் பரிசாக 15 மில்லியன் திர்ஹம் வழங்கப்பட இருக்கிறது. இது இந்திய மதிப்பில் 3 கோடியாக கணக்கிடப்படுகிறது.
வழக்கமாக, இரண்டு டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு கூடுதலாக ஒரு டிக்கெட் இலவசமாக கிடைக்கும். காதலர் தின ஃபிளாஷ் விற்பனையின் போது டிக்கெட் வாங்குபவர்களும் வரவிருக்கும் வாராந்திர இ-டிராவில் கலந்து கொள்ள முடியும். இதன்மூலம், 100,000 திர்ஹம்ஸ்களுடன் வெளியேறும் மூன்று வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
மாபெரும் பரிசான 15 மில்லியன் திர்ஹம்ஸுடன், இரண்டாம் பரிசாக 1 மில்லியன் திர்ஹமும் மற்றும் இரண்டு கூடுதல் பரிசுகளும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் குலுக்கலில் வழங்கப்பட இருக்கிறது.
அடுத்த மாத குலுக்கலுக்கு, www.bigticket.ae என்ற இணையதளத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் ஐன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கடைகளில் உள்ள கவுண்டர்களில் நேரடியாக சென்று வாங்கலாம்.