UAE Tamil Web

ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி – சாகசப் பிரியர்களின் சொர்க்க பூமி – தைரியம் இருக்கவங்க மட்டும் இங்க போங்க…!

ferrari world abudhabi experience

ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி: வேகமான ரேஸ் கார்களை விரும்புவர்களா நீங்கள்? அப்படியென்றால் ஃபெராரி கார்களை பற்றி நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். ஆனால் அதை தூரத்தில் இருந்து பார்த்தால் மட்டும் போதுமா? அதன் கம்பீரமான அழகை அனுபவிக்க இதோ ஒரு வாய்ப்பு. ஆம்.! விலை கொடுத்து வாங்காமலே அதில் அசுர வேகத்தில் செல்ல முழு சுதந்திரம் அளிக்கிறது ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி.

அபுதாபியின் ஃபெராரி வேர்ல்ட் உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாகும். அபுதாபியின் புகழ்பெற்ற இந்த இடத்தில் தங்கள் நாளை கழிக்க சுற்றுலாவாசிகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பெரிதும் விரும்புகின்றனர்.

உங்கள் பயணத்தை சுவாரசியமாக மாற்ற ஃபெராரி வேர்ல்ட் உங்களை ஈர்ப்புகள், சவாரிகள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகள் உட்பட அனைத்து வகையிலும் வரவேற்கிறது. ஃபெராரி கார்கள் மீதான அளவில்லா ஆர்வமுடையவர்களுக்கு அதனை ஒட்டுமொத்தமாக தீர்த்துக்கொள்ளும் அளவு இங்கே உள்ள ஈர்ப்புகள் அனைத்தும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டு முழுவதும் உங்களை மகிழ்ச்சியாக வைப்பதற்காக ஃபெராரி வேர்ல்ட் பல்வேறு நிகழ்ச்சிகளை வரிசையில் வைத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் உங்கள் பசியை தீர்ப்பதற்கு ஏகப்பட்ட உயர்தர உணவகங்களும் இங்கே இருக்கின்றன. இதைப்பற்றி சற்று விரிவாக காணலாம் வாங்க.!

1. கிராண்டே ஸ்பெட்டகோலோ (Grande Spettacolo):

Grande Spettacolo
Image Credit: hozpitalityplus.com

சினிமா மரனெல்லோவில் (Cinema Maranello) பிரத்யேகமாக காட்சிப்படுத்தப்படும், உலக புகழ்பெற்ற மார்வெல் (Marvel) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கிராண்டே ஸ்பெட்டகோலோ (Grande Spettacolo) ஒரு அற்புதமான நிகழ்ச்சியாகும். இது சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும். இதில் அக்ரோபாட்டிக்ஸ், மனதைக் கவரும் மாயைகள், கவர்ந்திழுக்கும் நடன நடைமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உங்களை உற்சாகப்படுத்துகிறது.

சினிமா மரனெல்லோ (Cinema Maranello):

Cinema Maranello
Image Credit: i.ytimg.com

இது உங்களை 1920 களின் இத்தாலிய சினிமாவின் சகாப்தத்திற்கு அழைத்துச் செல்கிறது. மேலும் என்சோ ஃபெராரி எப்படி தனது வாழ்நாள் கனவிற்கு உயிர் கொடுத்தார் என்பதை உங்களுக்கு விளக்குகிறது.

இவர்களை சந்திக்கவும்:

Khaleel the Camel and Berto the Mechanic
Image Credit: twitter.com/Ferrariworldad

கலீல் ஒட்டகம் மற்றும் பெர்டோ, மெக்கானிக் ஆகியோர் தான் அபுதாபியின் ஃபெராரி உலகின் இரண்டு அபிமான கதாபாத்திரங்கள். இந்த பூங்கா முழுவதும் அவர்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதால் நீங்கள் அவர்களை எண்ணற்ற முறை பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

என்னனென்ன சவாரிகள் இங்கே உள்ளன?

rides and attractions
Image Credit: https://www.thrillophilia.com/

வேகத்தை விரும்புவர்களுக்கு:

ஃபெராரி வேர்ல்டில் சில வேகமான வேடிக்கை சாகசங்களுக்காக உங்களது நாளை கழிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஏனெனில் அட்டகாசமான உணர்வை தரும் இப்படி ஒரு அதிவேகமான பொழுதுபோக்கு வாழ்வில் ஒருமுறையாது அனுபவிக்கத்தான் வேண்டும். இந்த அனுபவத்தை தர ஃபார்முலா ரோசா (Formula Rossa), ஸ்குடேரியா சவால் (Scuderia Challenge), கார்டிங் அகாடமி (Karting Academy), ஃப்ளையிங் ஏஸஸ் (Flying Aces), ஃபியோரானோ GT சேலஞ்ச் (Fiorano GT Challenge), டர்போ டிராக் (Turbo Track) ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

சிறிய சாம்பியன்களுக்கு:

for kids ferrari world
Image Credit: Zamperla.com

ஃபெராரி வேர்ல்ட் உங்கள் குழந்தைகளுக்கும் கற்பனைக்கு எட்டாத பொழுதுபோக்குகளை தன்வசம் வைத்துள்ளது. நெல்லோவின் அட்வென்ச்சர்லேண்ட் (Nello’s Adventureland), RC சேலஞ்ச் (RC Challenge), கலீலின் கார் வாஷ் (Khalil’s Car Wash), ஜூனியர் பயிற்சி முகாம் (Junior Training Camp) மற்றும் பெல் இத்தாலியா (Bell Italia) ஆகியவை உங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த ஈடுபாடாக அமையும்.

குடும்ப வேடிக்கைக்காக:

ஃபெராரி வேர்ல்ட் அபுதாபிக்கு உங்கள் குடும்பத்தை கொண்டு வர திட்டமிட்டால், உங்கள் குடும்பத்துடன் நீங்கள் நிறைய ஈர்ப்புகளை இங்கே அனுபவிக்க முடியும். ஆம்! டயர் ட்விஸ்ட் (Tyre Twist), டயர் சேஞ்ச் எக்ஸ்பெரியென்ஸ் (Tyre Change Experience), மோட்டார் மிட்வே கேம்ஸ் (Motor Midway Games), மேட் இன் மரானெல்லோ (Made in Maranello), கேலரியா ஃபெராரி (Galleria Ferrari), டிரைவிங் வித் தி சாம்பியன் (Driving with the Champion), ஸ்பீட் ஆஃப் மேஜிக் (Speed of Magic), பென்னோவின் கிரேட் ரேஸ் (Benno’s Great Race) மற்றும் வயாகியோ இன் இத்தாலி (Viaggio in Italia) ஆகிய அனைத்தும் குடும்பத்திற்கான பொழுதுபோக்காகும்.

இடம்:

அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்.

நேரம்:

ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயங்குகிறது.

ferrari world abudhabi
Image Credit: https://www.thrillophilia.com/
ஒரு நாள் டிக்கெட் விலை:

ஃபெராரி வேர்ல்ட் அபுதாபிக்கு ஒரு நாள் டிக்கெட் விலை 295 AED இல் கிடைக்கிறது.

குழந்தைகளின் டிக்கெட் விலை: சுமார் 230 AED.

இந்த ஒரு நாள் டிக்கெட் மூலம் ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி முழுவதும் நீங்கள் அனுபவிக்கலாம். எந்த தடையும் இல்லை.

1 நாள் ஏதேனும் இரண்டு பூங்காக்களின் டிக்கெட் விலை:

பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும்: சுமார் 395 AED

இந்த டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் 1 நாள் ஃபெராரி வேர்ல்ட் அபுதாபிற்குள் மற்றும் வார்னர் ப்ரதர்ஸ் வெர்ல்டிற்குள் (Warner Bros. World) அல்லது யாஸ் வெர்ல்டிற்குள் (Yas World) செல்லலாம்.

2 நாள் ஏதேனும் இரண்டு பூங்காக்களின் டிக்கெட் விலை:

பெரியவர்களுக்கு: 435 AED

குழந்தைகளுக்கு: 330 AED

இந்த டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் இரண்டு நாட்கள் ஃபெராரி வேர்ல்ட் அபுதாபிற்குள் மற்றும் வார்னர் ப்ரதர்ஸ் வெர்ல்டிற்குள் (Warner Bros. World) அல்லது யாஸ் வெர்ல்டிற்குள் (Yas World) செல்லலாம்.

3 நாள் ஏதேனும் 3 பூங்காக்களின் டிக்கெட் விலை:

பெரியவர்களுக்கு: 545 AED

குழந்தைகளுக்கு: 410 AED

இந்த டிக்கெட் மூலம் நீங்கள் 3 பூங்காவிற்கு தடையின்றி நுழையலாம்.

ஃபெராரி வேர்ல்ட் அபுதாபிக்குள் குறிப்பிட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்:
  • 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போதும் டிக்கெட் பெற்ற பெரியவருடன் இருக்க வேண்டும்.
  • 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை.
  • உள்ளே நுழைவதற்கு நீங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடியை (ID) எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் அனுமதி மறுக்கப்படும்.
  • நீங்கள் ஃபெராரி வேர்ல்ட் அபுதாபியில் நுழைந்தவுடன் அனைத்து விதிகளையும் ஒழுங்குகளையும் முறையாக கவனிக்க வேண்டும்.
  • வெளியிலிருந்து உணவுகளை ஃபெராரி வேர்ல்ட் அபுதாபிக்கு எடுத்து செல்வதை தவிர்க்கவும். உள்ளே பல உணவகங்கள் உள்ளன. நீங்கள் எப்போதும் உங்களுடன் தண்ணீர் பாட்டிலுடன் செல்லலாம். பூங்காக்களுக்குள், உங்கள் வசதிக்காக பல நீர் நிரப்பும் இடங்கள் உள்ளன.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap