UAE Tamil Web

15000 பட்டாம்பூச்சிகளை ஒரே இடத்தில் பார்க்க ஆசையா..? துபாய் பட்டர்ஃபிளை கார்டனுக்குள் சுற்றுலா போகலாம் வாங்க..?

பல சுற்றுலாத்தலங்களுக்கு இதயமாக இருக்கும் அமீரகத்தின் மேலும் ஒரு அற்புதமான இடம் தான் துபாய் பட்டர்ஃபிளை கார்டன். துபாய் மிராக்கிள் கார்டனின் ஒரு அங்கமான இந்த பட்டர்ஃபிளை கார்டனின் சுவாரசியமான தகவல்கள் மற்றும் அதன் சிறப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்.

துபாய் பட்டர்ஃபிளை கார்டனின் சிறப்பு:

2015 ஆம் ஆண்டு துபாய் மிராக்கிள் கார்டனின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்ட துபாய் பட்டர்ஃபிளை கார்டன் தான் “உலகின் மிகப்பெரிய உட்புற பட்டர்ஃபிளை கார்டன்” என்று புகழாரம் சூட்டப்பட்ட பெருமைக்குரியது. இந்த தோட்டம் 2600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

butterfly garden dubai

50 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 15,000 பட்டாம்பூச்சிகளைக் கொண்டுள்ளது  என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

அதுமட்டுமின்றி, துபாய் பட்டர்ஃபிளை கார்டனில் உள்ள ஊழியர்கள் தொழில்முறை பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பல்வேறு பட்டாம்பூச்சிகளைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டுள்ளனர். பட்டாம்பூச்சிகள் பற்றி பார்வையாளர்களுக்கு எழக்கூடும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு சரியான மற்றும் தெளிவான விவரங்களை அளிப்பதில் சிறந்தவர்களாக இப்பணியாளர்கள் உள்ளனர்.

butterfly gardenமேலும் துபாய் பட்டர்ஃபிளை கார்டன் உலகம் முழுவதும் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது என்பது அதன் மற்றொரு சிறப்பாகும்.

கூடுதல் சுவாரஸ்யமாக, துபாய் பட்டர்ஃபிளை கார்டனில் பல்வேறு வகையான தேன் செடிகளும் நடப்பட்டுள்ளன. இது தோட்டத்தின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பட்டாம்பூச்சிகள் தேனீரை உண்பதால் அவைகள் சிறந்த நிலையான ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்கிறது.

சினிமா பார்த்து அறிவை வளர்ப்போம்:

துபாய் பட்டர்ஃபிளை கார்டனில் குழந்தைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் குறித்து ஆர்வமுடையவர்களுக்கு பட்டாம்பூச்சிகள் தொடர்பான கல்வித் திரைப்படங்களைப் பார்க்கக்கூடிய ஒரு சினிமா உள்ளது. முதலில் தோட்டத்தில் பட்டாம்பூச்சிகளின் அழகை ரசித்து பின் சினிமாவிற்கு சென்று பட்டாம்பூச்சிகளின் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்வது கணிசமாக பார்வையாளர்களின் அறிவை வளர்க்கிறது.

பட்டாம்பூச்சிகளுடன் செல்ஃபீ:

உலகில் எந்த மூளைக்கு சென்றாலும் கிடைக்காத ஒரு அற்புத வாய்ப்பு. ஆம்! 50 வெவ்வேறு இனத்தை சேர்ந்த 15000 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை ஒரே இடத்தில் கண்டு அதனுடன் செல்ஃபீ எடுத்துக்கொள்ளும் வசதியும் துபாய் பட்டர்ஃபிளை கார்டனில் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

dubai butterfly gardenவண்ண வண்ண பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை முறைகள் மற்றும் இச்சிறிய அழகான பட்டாம்பூச்சிகளின் உணவுமுறைகளை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கம் உங்களுக்கு இருந்தால் அதற்கு சிறந்த இடம் இந்த துபாய் பட்டர்ஃபிளை கார்டன் தான். இத்தோட்டத்தை விட்டு வெளியேறும் போது நிச்சயமாக அனைவரும் பட்டாம்பூச்சிகளை பற்றி தனித்துவமான அறிவை கற்றிருப்பர் என்பது உறுதி.

பிரமிப்பூட்டும் இயற்கை:

துபாய் பட்டர்ஃபிளை கார்டன் 6673 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இத்தோட்டம் வருடம் முழுவதும் திறந்திருக்கும் என்பதினாலே இதிலுள்ள கூரைகள் (Domes) அனைத்தும் சிறந்த காலநிலை கட்டுப்பாடுகளினால் பராமரிக்கப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கூரைகளிலும் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இருப்பதால், இந்த தனித்துவமான காட்சியை நீங்கள் காணும்போது இயற்கையின் அழகிற்கு மிஞ்சியது வேறு ஏதுமில்லை என்பது உணர முடிகிறது.

துபாய் பட்டர்ஃபிளை கார்டனிலுள்ள ஈர்ப்புகள்:

பட்டர்ஃபிளை மியூசியம்:

butterfly museumஇது பார்வையாளர்களை மயக்கும் ஒரு பிரமிப்பூட்டும் அருங்காட்சியகமாக விளங்குகிறது. இதனுள் இருக்கும் பல கலைப்பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பட்டாம்பூச்சிகளினால் செய்யப்பட்டவை ஆகும்.

முதல் பார்வையில் இந்த அருங்காட்சியத்திலுள்ள படங்கள் யாவும் கையால் வரையப்பட்டதை போன்று காட்சியளிக்கும். ஆனால் சற்று உற்று நோக்கினால்தான் அந்த வடிவமைப்புகளை உருவாக்க இறந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட பட்டாம்பூச்சிகளை பயன்படுத்திருப்பதை உணரமுடியும்.

Koi குளம்:

koi pondதுபாய் கார்டனின் கூரை 2 (Dome 2)-ல் அமைந்துள்ள குளத்தின், அமைதியான நீரில் நீந்தும் அழகான கோயி (Koi Fish) மீன்களும் பார்ப்பதற்கு ஒரு விருந்தாகும். மேலும் குளத்தின் ஓடும் நீரும் அந்த இடத்தின் அழகை அதிகரிக்கிறது. இவற்றுடன் சேர்ந்து அங்கே நிரம்பியுள்ள அமைதியான சூழல் நிச்சயமாக பார்வையாளர்களை மயக்கும்.

பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி:

துபாய் பட்டர்ஃபிளை கார்டனில் நீங்கள் காணும் அழகான மற்றும் பிரமிப்பூட்டும் பட்டாம்பூச்சிகள் இந்த தனித்துவமான தோற்றத்தை அடைய பல்வேறு நிலைகளில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ளன. அதைப்பற்றிய ஒரு தரமான பார்வையை இத்தோட்டத்தின் கல்விப் பகுதி வழங்குகிறது. எனவே பார்வையாளர்கள் தவறவிடக்கூடாத இடமாக இது திகழ்கிறது.

இதைத்தவிர பார்வையாளர்களின் ருசியை தூண்டும் விதமாக துபாய் பட்டர்ஃபிளை கார்டனின் அருகிலேயே பல காஃபி கடைகளும், இனிப்பு மற்றும் மிட்டாய் கடைகளும் உணவகங்களும் அமைந்துள்ளன. இதனை கண்டு அறிவை அதிகரித்த பின்பு துபாய் மிராக்கள் கார்டனையும் சென்று அதன் அழகை ரசிக்க தவறாதீர்கள்.

butterflies

துபாய் பட்டர்பிளை கார்டனைக் கண்டு அதன் அழகில் விழுந்து வெளியே வரும் போது, துபாய் மிராக்கள் கார்டனின் அழகை ரசிக்கவும் பார்வையாளர்கள் தவிர வேண்டாம். ஒரே நாளில் இயற்கையின் இரண்டு அற்புதங்களை அனுபவிக்க தவறாதீர்கள்!

இடம்:

அல் பார்ஷா தெற்கு 3, துபைலாண்ட் பகுதி, துபாய் (துபாய் மிராக்கிள் கார்டன் அருகில்)

பார்வை நேரம்:

வார நாட்களில் மற்றும் வார இறுதி நாட்களில் காலை 9:00 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மேலும் இது அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்.

டிக்கெட் விலை:

3 வயது முதல் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும்: 55 AED
2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு: இலவசம்
மாற்றுத்திறனாளிகளுக்கு: இலவசம்

குறிப்பு:

இந்த டிக்கெட்டுகள் துபாய் பட்டர்ஃபிளை கார்டன் டிக்கெட் கவுண்டரில் மட்டுமே கிடைக்கும். வேறு எந்த இடத்திலிருந்தும் வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் நுழைவதற்கு செல்லுபடியாகாது.

பார்வையாளர்களுக்கு சில டிப்ஸ்:

  • துபாய் பட்டர்ஃபிளை கார்டனிலுள் எதை எடுத்துச் செல்ல வேண்டும் என திட்டமிடுங்கள். பதப்படுத்தப்பட்ட பழமையான உணவு பட்டாம்பூச்சிகளை ஈர்த்து அவைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், தோட்டத்திற்குள் எந்த உணவுப் பொருட்களும் எடுத்துச்செல்ல அனுமதியில்லை.
  • துபாய் பட்டர்ஃபிளை கார்டனில் சில தடைசெய்யப்பட்ட பகுதிகள் உள்ளதால் அவற்றை கடந்து செல்வதை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் கார்டனில் காலநிலை கட்டுப்பாட்டு கூரைகள் இருப்பதினால், கார்டன் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்து அறிவுறுத்தல்களும் பின்பற்றப்பட வேண்டும்.
  • துபாய் பட்டர்ஃபிளை கார்டனின் பட்டாம்பூச்சிகளை தொடுவதைத் தவிர்க்கவும்
4 Shares
Share via
Copy link