UAE Tamil Web

துபாய் டால்பினேரியம் செல்லத் தயாரா? எப்போது போகலாம்..? கட்டணம் எவ்வளவு..?

dubai dolphinarium

துபாய் டால்பினேரியம் எதற்காக? அதன் உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது? வாருங்கள் பார்க்கலாம்!

சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருடைய மனதையும் கொள்ளை கொள்ளக்கூடிய ஒரு பாலூட்டி என்றால் அது கண்டிப்பாக டால்பின்கள் தான். அதன் குழந்தை போன்ற அப்பாவி முகமும் அதன் பாசமான அசைவுகளும் அதனை யார் பார்த்தாலும் தன் வசம் இழுக்கும் அம்சமாகும். அப்படிப்பட்ட ஒன்றை மக்களின் பொழுதுபோக்கு தலமாக கொண்டு வந்துள்ளது துபாய்.

dubai dolphinariumஆம்! க்ரீக் பூங்காவில் அமைந்துள்ள துபாய் டால்பினேரியம், அற்புதமான டால்பின்கள் மற்றும் கடல்நாய்களுடன் சில புத்துணர்ச்சியூட்டும் வகையில் நேரத்தை செலவிட பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது.

துபாய் டால்பினேரியம்:

நீர் சண்டைக்காட்சிகள் மற்றும் சாகசங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்காக இந்த அழகான உயிரினங்கள் தொழில் ரீதியாக பயிற்சி பெற்றவைகளாகும். எனவே, இசை மற்றும் ட்யூன்களுக்கு இந்த குறும்புக்கார டால்பின்கள் நடனமாடுவதையோ அல்லது பந்துகளுடன் விளையாடுவதையோ பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். உங்களின் மன அழுத்தங்களை குறைப்பதற்காக தங்களால் முடிந்த அளவு திறமைகளை வெளிப்படுத்தி உங்களை மகிழ்வித்து ஈர்க்க சிறந்த முயற்சிகளையும் பயிற்சிகளையும் இவைகள் கையாளுகின்றன.

ஒரு மகிழ்ச்சியான விடுமுறையில் இந்த உயிரினங்களின் நேரடி ஸ்டண்ட் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் உங்களை ஈடுபடுத்த தயாராகுங்கள்.

டால்பின் மற்றும் சீல் ஷோ:

டால்ஃபின்கள் மற்றும் சீல் (கடல் நாய்) ஆகிய இரண்டின் அழகையும் அவைகள் செய்யும் சேட்டையயும் ஒன்றாக நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் அதற்கான வாய்ப்பை துபாய் டால்பினேரியம் உங்களுக்கு வழங்குகிறது. இந்த வலிமையான கடல் உயிரினங்கள் அவைகளின் அபிமான திறன்கள் மற்றும் சாகசங்களால் உங்களை நிச்சயமாக மயக்கும்.

Dubai-Dolphinarium_530x@2xஇவைகள் அனைத்திற்கும் பாடுவதற்கும், பந்துகளை வீசி விளையாடுவதற்கும், மேலும் பல வித்தை செய்வதற்கும் தனித்துவமான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வளையங்கள் வழியாக இவைகளை குதிப்பதை நீங்கள் கண்டால் நிச்சயமாக வாயடைத்து போவீர்கள்.! இப்படிப்பட்ட சாகசத்தை செய்வதற்கு இவைகள் நிறைய அனுபவமும் சிறந்த பயிற்சியும் பெற்றிருக்கின்றன.

க்ரீக் பார்க் கவர்ச்சிகரமான பறவைக் காட்சி:

creek park bird show

துபாய் டால்பினேரியத்தின் க்ரீக் பார்க் பறவைகள் நிகழ்ச்சி (Creek Park Bird Show) தான் இதுவரை மத்திய கிழக்கிலே நிகழும் மிகச் சிறந்த மற்றும் ஒரே வெளிநாட்டுப் பறவை நிகழ்ச்சியாகும். நீங்கள் இதுவரை கண்டிராத எண்ணற்ற அழகிய பறவைகள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று உங்கள் மனதை கொள்ளை கொள்ள பயிற்சி பெற்றவைகளாகும். இந்நிகழ்ச்சியில் அமேசான் காட்டு கிளிகள் முதல் அறிய வகைகளான பச்சை இறக்கை கொண்ட மக்காக்கள் (Green-Winged Macaws) வரை காணமுடியும்.

அதுமட்டுமின்றி நீங்கள் இதுவரை ஸ்டெல்லர் கடல் கழுகை (Steller’s Sea Eagle) நேரில் சந்தித்ததில்லை என்ற வருத்தப்பட வேண்டாம். அதற்கான வாய்ப்பையும் இந்த பறவைகள் காட்சி வழங்குகிறது. பலவகை பறவைகளுடன் சிறகை விரித்து பறக்க நீங்களும் தயாராகுங்கள்.!

steller's sea eagleமேலும் இந்த உல்லாச பறவையுடன் சில அழகான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களைப் படம்பிடிக்க நீங்கள் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களை அணுகலாம். அத்துடன் ‘ஃபீட் தி பேர்ட்ஸ்’ (‘FEED THE BIRDS’) திட்டத்தின் கீழ் சில பறவைகளுக்கு உணவளிக்கவும் நிர்வாகம் வாய்ப்பளிக்கிறது. அதற்கான கட்டணம் 25 AED என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பின் பிளானட் (Dolphin Planet):

டால்பினுடன் கம்பீரமான நீச்சலை சேர்ந்து அனுபவியுங்கள்! ஆமாம், இந்த அற்புதமான கடல் உயிரினங்களை கட்டிப்பிடிப்பதற்கும், முத்தமிடுவதற்கும் அதனுடன் சேர்ந்து நடனமாடுவதற்கும் டால்பின் பிளானட் உங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது. ஒவ்வொரு அடியிலும், டால்பின்களைப் பற்றிய எல்லாவற்றையும் உங்களுக்கு வழிகாட்ட தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் இருப்பார்கள்.

இவற்றை அனுபவிக்க முக்கியமான ஒன்று, உங்களுக்கு நீச்சல் தெரிஞ்சிருக்க வேண்டும்.! ஆழமான நீச்சலுக்கு, நீங்கள் சுமார் 630 AED செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mirror Maze – Labyrinth @ Dolphinarium:

mirror mazeஇப்போது சவாலான பொழுதுபோக்கிற்கான நேரம். இந்த குழப்பமான கண்ணாடி வழியில் சரியான பாதையை கண்டுபிடிக்க உங்கள் மூளைக்கு இது ஒரு சரியான சவால். சரியான திசையை கண்டுபிடித்து வெளியே வர வேண்டுமென்றால் இந்த தந்திரத்தை கடந்தால் தான் முடியும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள!. நிச்சயமாக இது உங்களுக்கு ஒரு சவாலான நினைவாக அமையும்.

5D/7D சினிமா அனுபவம்:

இந்த 5D/7D சினிமா அனுபவம் நிச்சயமாக உங்களை அடுத்த நிலை பொழுதுபோக்குக்கு அழைத்துச் செல்லும் என்று உறுதியளிக்கிறது. இது பார்வையாளர்களை பரவசப்படுத்துவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் துபாயில் பார்வையிட இது மிகவும் அற்புதமான இடங்களில் ஒன்றாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

டிராம்போலைன்:

துபாய் டால்பினேரியத்தில் இந்த டிராம்போலைனில் குதித்து குதித்து உங்கள் குழந்தைப் பருவத்திற்கு மீண்டும் ஒருமுறை திரும்பிச் செல்லுங்கள். இந்த உட்புற டிராம்போலைனில் அனைத்து வயதினருக்கும் அனுமதி உண்டு.

trampoline

விர்ச்சுவல் ரியாலிட்டி ( VIRTUAL REALITY):

தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம், செயற்கையான நம்பமுடியாத கற்பனையில் பயணம் செய்யும் அனுபவத்தை இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. திரையில் ஒரு இடத்தை பார்ப்பதோடு அல்லாமல் அதனுள் சென்று பங்குபெறும் ஒரு 3D அனுபவத்தை இது உங்களுக்கு அளிக்கிறது. கற்பனை செய்து பாருங்கள்.! ஒரு பேய் படத்தின் உள்ளே நீங்கள் பேய்களோடு பயணம் செய்வதை பற்றி.! இந்த புல்லரிக்கும் தருணத்தை அனுபவியுங்கள்!

உணவகங்கள்:

துபாயில் மேற்கொள்ளும் எந்த ஒரு பயணமும் ஒரு நல்ல உணவகம் இல்லாமல் முடிவடையாது. அதற்கு ஏற்ப, துபாய் டால்பினேரியத்திலும் பலவகை உணவகங்களும், குளிர்பான கடைகளும், இனிப்பு கடைகளும் உங்களின் சுவை தீர்க்க தயராக உள்ளன.

துபாய்க்கு சுற்றுலா வரும் அனைவருக்கும் ஒரு நல்ல தருணத்தை இந்த துபாய் டால்பினேரியம் அளிப்பதில் உறுதியாக உள்ளது. நிச்சயமாக வாழ்வில் ஒரு முறையாவது இதனை கண்டுகளிக்க வேண்டும் என ஆர்வம் கொள்ளும் வகையில் இது பார்வையாளர்களை கவரக்கூடிய இடமாகும்.

இடம்:

ரியாத் தெரு, க்ரீக் பார்க் கேட் 1 உள்ளே – துபாய் – ஐக்கிய அரபு அமீரகம்.

பார்வை நேரம்:

துபாய் டால்பினேரியம் சரியாக காலை 10:00 மணிக்கு திறந்து இரவு 07:30 மணிக்கு மூடப்படும். இது அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும்.

ஞாயிற்றுக்கிழமை முழு துபாய் டால்பினேரியத்திற்கும் அதிகாரப்பூர்வ விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் விலை:

டால்பின் & சீல் ஷோ:

வழக்கமான டிக்கெட் (Regular Ticket) – 75 AED (பெரியவர்கள்) மற்றும் 45 AED (குழந்தை)

விஐபி டிக்கெட் (V.I.P Ticket)- 125 AED (பெரியவர்கள்) மற்றும் 85 AED (குழந்தை)

க்ரீக் பார்க் பறவை நிகழ்ச்சி:

டிக்கெட் விலை – 50 AED (பெரியவர்கள்) மற்றும் 30 AED (குழந்தை)

டால்பின் பிளானட்:

ஆழமான நீச்சல் – 630 AED (பொது குழு (Mixed Group)) மற்றும் 2500 AED (தனியார் குழு (Private Group))

dubai dolphinarium
10 Shares
Share via
Copy link