UAE Tamil Web

இந்திய அரசின் பட்ஜெட் 2022: விமான பயணிகளுக்கு பெரும் ஏமாற்றம்..!

இந்திய அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் தாக்கல் இன்று நடைபெற்றது. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே, விமான பயணிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதத்தின் முதல் நாளில் ATF விலை உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருளான ATF (Aviation Turbine Fuel) 8.5 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஏடிஎஃப் விலை கிலோலிட்டருக்கு ரூ.6743 கிலோ அதிகரித்துள்ளது. இதனால் இனி விமான டிக்கெட்டின் விலை உயரும் என தெரிகிறது.

இந்திய அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனங்கள் அளித்த தகவலின்படி, டெல்லியில் ATF விலை கிலோலிட்டர் ரூ.79,294.91ல் இருந்து ரூ.86308.16 ஆக உயர்ந்துள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி, விமான எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ.2,039.63 அல்லது 2.75 சதவீதம் உயர்த்தப்பட்டு கிலோலிட்டருக்கு ரூ.76,062.04ஐ எட்டியது. அதேபோல் அதற்கு முன் டிசம்பரில், ATF விலைகள் இரண்டு முறை குறைக்கப்பட்டன.

நவம்பர் நடுப்பகுதியில் விமான எரிபொருளின் விலை அதிகபட்சமாக ஒரு கிலோ லிட்டர் ரூ.80,835.04 ஆக இருந்தது. அதே நேரத்தில், டிசம்பர் 15 அன்று ATF விலை கிலோ லிட்டருக்கு 8.4 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ATF விலை அதிகரித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap