39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

பிக் டிக்கெட் என்றால் என்ன? டிக்கெட் எப்படி வாங்குவது? யாரெல்லாம் டிக்கெட் வாங்கலாம்? இதோ முழுமையான தகவல்.!

Big Ticket Abu Dhabi

ஒரே இரவில் மில்லியனராக மாறுவது அல்லது ஒரு சொகுசு வாகனத்தை தனக்கென சொந்தமாக பெறுவது போன்ற கனவுகள் எல்லாம் கண் மூடி திறக்கும் நேரத்தில் நிறைவேறுவது திரைப்படத்தில் தான் நடக்குமே தவிர நிஜ வாழ்க்கையில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

ஆனால் பிக் டிக்கெட் அபுதாபி ரேஃபிள், கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற கனவுகளை நிஜமாக மாற்றுவதன் மூலம் பலரின் வாழ்க்கையை மாற்றி வருகிறது. பல லட்ச கணக்கான ரொக்கப் பரிசுகள் மற்றும் சொகுசு கார்களுக்கான வாய்ப்பை தரும் இந்த மாதாந்திர பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததில்லை என்றால் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பை நீங்கள் இழந்து வந்துள்ளீர்கள் என்றே கூறலாம்.

பிக் டிக்கெட் ரேஃபிள் பற்றி பல கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் அனைவரின் மனதிலும் இருக்கின்றன. அதற்கான விடையை கண்டுபிடிக்க வேறு எங்கேயும் அலைய வேண்டாம். இதோ ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள அனைத்து தகவல்களும்:

பிக் டிக்கெட் என்றால் என்ன?

பிக் டிக்கெட் என்பது அபுதாபியில் ரொக்கப் பரிசுகள் மற்றும் சொகுசு கார்களுக்கான மாதாந்திர ரேஃபிள் டிரா (குலுக்கல் பரிசு) ஆகும்.

இது 1992 இல் மாதந்தோறும் 1 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசுடன் தொடங்கியது. பின்னர் மாதந்தோறும் 10 மில்லியன், 12 மில்லியன், 15 மில்லியன் போன்ற பரிசு தொகையுடன் நடந்து வந்த பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா, சமீபத்தில்(டிசம்பர் 2019) மிக உயர்ந்த பரிசாக 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு தொகைக்கான டிராவை நடத்தியது. இந்த பரிசு தொகை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் பெரும்பாலானோரின் கனவு கார்களான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), ஜாகுவார் (Jaguar), கொர்வெட் (Corvette), ஃபோர்டு முஸ்டாங் (Ford Mustang) மற்றும் மினி-கூப்பர் (Mini-Cooper) போன்றவற்றை வெல்வதற்கும் ஒரு டிரா உள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் 1-ன் வருகை லாபியில் லைவ் டிரா (Live draw) நடைபெறும். இந்த லைவ் டிரா ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடிக்கும். மொத்தம் 10 ரேஃபிள் டிக்கெட்டுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சிறிய பரிசுகளான 10,000 திர்ஹம்ஸ் முதல் தொடங்கி பெரும் பரிசு தொகையில் நிறைவடையும்.

இந்த பிக் டிக்கெட் ரேஃபிள் 1999 ஆம் ஆண்டில் துபாய்க்கு வந்த ரிச்சர்ட் என்ற ஆங்கிலேயரால் நடத்தப்படுகிறது. தொடர்ந்து பல இடங்களில் பணிபுரிந்த ரிச்சர்ட், 2006 முதல் பிக் டிக்கெட் ரேஃபிளை நடத்தி வருகிறார். ஒவ்வொரு டிராவிற்கும், ரிச்சர்ட் ரேஃபிள் சக்கரத்தை சுழற்றி, தோராயமாக ஒரு சில டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுப்பார். பின்னர் அவர் பார்வையாளர்களில் ஒருவரை, ஜெயிக்க போகும் டிக்கெட்டை எடுக்கச் சொல்லி அதன்பின் டிக்கெட்டைத் திறந்து வெற்றியாளரை அறிவிப்பார். வெற்றியாளர் அறிவிக்கப்பட்டதும், விவரங்கள் சரியான நேரத்தில் பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

பிக் டிக்கெட் ரேஃபிளை எங்கே வாங்குவது?

பிக் டிக்கெட்டுகளை ஆன்லைனில் www.bigticket.ae என்கிற இணையதளத்தில் வாங்கலாம் அல்லது பின்வரும் இடங்களில் நேரடியாக சென்றும் வாங்கலாம். அவை 24*7 மணி நேரமும் திறந்திருக்கும்.

  • வருகை மண்டபம், அபுதாபி சர்வதேச விமான நிலையம், டு மற்றும் டிராவெலெக்ஸ் இடையே (Arrivals Hall, Abu Dhabi International Airport, Between Du and Travelex)
  • டெர்மினல் 1 புறப்பாடு சுரங்கம், அபுதாபி சர்வதேச விமான நிலையம் (Terminal 1 Departures Tunnel, Abu Dhabi International Airport)
  • டெர்மினல் 1 ஏ புறப்பாடு டூட்டி பிரீ, அபுதாபி சர்வதேச விமான நிலையம் (Terminal 1A Departures Duty-Free, Abu Dhabi International Airport)
  • டெர்மினல் 1 ஏ வருகை டூட்டி பிரீ, அபுதாபி சர்வதேச விமான நிலையம் (Terminal 1A Arrivals Duty-Free, Abu Dhabi International Airport)
  • டெர்மினல் 2 லேண்ட்ஸைட் ஏரியா (ரிலேவுக்கு அடுத்து), அபுதாபி சர்வதேச விமான நிலையம் (Terminal 2 Landside Area (Next to Relay), Abu Dhabi International Airport)
  • டெர்மினல் 2 புறப்பாடு டூட்டி பிரீ, அபுதாபி சர்வதேச விமான நிலையம் (Terminal 2 Departures Duty-Free, Abu Dhabi International Airport)
  • டெர்மினல் 2 வருகை டூட்டி பிரீ, அபுதாபி சர்வதேச விமான நிலையம் (Terminal 2 Arrivals Duty-Free, Abu Dhabi International Airport)
  • டெர்மினல் 3 புறப்பாடு (கேட் 28), அபுதாபி சர்வதேச விமான நிலையம் (Terminal 3 Departures (Gate 28), Abu Dhabi International Airport)
  • அல்-ஐன் விமானநிலைய நிலப்பரப்பு பகுதி (ரிலேவுக்கு அடுத்து) (Al-Ain Airport Landside Area (Next to Relay))
  • அல்-ஐன் விமானநிலைய புறப்பாடு டூட்டி பிரீ (Al-Ain Airport Departures Duty-free)

ஆன்லைனில் பிக் டிக்கெட்டை எவ்வாறு வாங்குவது?

மேலே குறிப்பிட்டுள்ள விற்பனை மையங்களில் டிக்கெட் வாங்க முடியாதவர்கள் அல்லது அமீரகத்திற்கு வெளியில் இருந்து டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ள எளிய ஆன்லைன் முறையை பின்பற்றி டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.

1. உங்கள் கணினி அல்லது மொபைல் போனில் உள்ள வெப் பிரௌசரில் (Web Browser) www.bigticket.ae என்னும் வலைத்தளத்திற்கு செல்லவும்.

Big Ticket Step1

2. “SIGN IN / REGISTER” லிங்கை கிளிக் செய்யவும்.

Big Ticket Step2

3. “Register Now” லிங்கை கிளிக் செய்யவும்.

Big Ticket Step3

4. உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பூர்த்தி செய்துவிட்டு “Create an account” லிங்கை கிளிக் செய்யவும்.

Big Ticket Step4

5. நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு “OTP Code” வரும். அந்த OTP Code பதிவு செய்துவிட்டு, “VALIDATE OTP” லிங்கை கிளிக் செய்யவும்.

Big Ticket Step5

6. படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விட்டு, “Register” லிங்கை கிளிக் செய்யவும்.

Big Ticket Step6

7. படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு “Register” லிங்கை கிளிக் செய்தவுடன், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பிக் டிக்கெட்டிலிருந்து ஒரு ACTIVATION மின்னஞ்சல் வரும். அந்த மின்னஞ்சலில் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

குறிப்பு: இந்த மின்னஞ்சலில் வரும் ACTIVATION லிங்கை கிளிக் செய்யாமல், உங்கள் புதிய கணக்கு வேலை செய்யாது.

Big Ticket Step7

8. உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் ACTIVATION லிங்கை கிளிக் செய்தவுடன், கீழே படத்தில் உள்ளது போல் வருகிறதா என்பதை உறுதி செய்யவும்.

Big Ticket Step8

9. பின்னர், நீங்கள் பங்கேற்க விரும்பும் நடப்பு மாதத்திற்கான பிக் டிக்கெட் டிராவை கிளிக் செய்யவும்.

Big Ticket Step9

10. நீங்கள் பங்கேற்க விரும்பும் பிக் டிக்கெட் டிராவின் டிக்கெட் விலை, டிரா தேதி(குழுக்கள் நடைபெறும் நாள்) போன்ற விவரங்களை சரிபார்த்துவிட்டு, “Buy Tickets” லிங்கை செய்யவும்.

Big Ticket Step10

11. நீங்கள் வாங்க விரும்பும் டிக்கெட் என்னை தேர்வு செய்துவிட்டு, “Add to Cart” லிங்கை கிளிக் செய்யவும்.

குறிப்பு: ஒரே பரிவர்த்தனையில் நீங்கள் 10 டிக்கெட்டுகள் வரை வாங்கலாம்.

Big Ticket Step11

12. நீங்கள் கலந்து கொள்ளும் பிக் டிக்கெட் டிராவின் விவரம், டிக்கெட் எண், டிக்கெட் விலை போன்ற அனைத்தையும் உறுதி செய்துவிட்டு “Proceed to checkout” லிங்கை கிளிக் செய்யவும்.

Big Ticket Step12

13. இறுதியாக நீங்கள் டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். பொதுவாக பிக் டிக்கெட்டிற்கு இரண்டு வழிகளில் பணம் செலுத்தலாம்.

  • Network: Debit கார்டு அல்லது Credit கார்டு மூலம் பணம் செலுத்த விரும்புபவர்கள் இந்த முறையை தேர்வு செய்து கொள்ளவும்.
  • Pay with cash on delivery: இந்த முறையில், நீங்கள் புக் செய்த பிக் டிக்கெட்டுகள் உங்கள் இடத்திற்கே டெலிவரி செய்யப்படும். அப்போது நீங்கள் பணம் கொடுத்தால் போதும். இந்த முறை அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Big Ticket Step13

பிக் டிக்கெட் விலை எவ்வளவு?

பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா, ரொக்கப் பரிசு மற்றும் ட்ரீம் கார்களுக்கான டிக்கெட்டுகளை ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்யும். ரொக்கப் பரிசுக்கான டிக்கெட் தலா 500 திர்ஹம்ஸ் ஆகும். நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினால், உங்களுக்கு ஒரு டிக்கெட் இலவசமாக கிடைக்கும் (ஆன்லைனில் வாங்கும் போது இது தானாகவே கணினியில் ஏற்றப்படும்).

ஒரே பரிவர்த்தனையில் (Single Transaction) இரண்டு டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு மட்டுமே ஒரு இலவச டிக்கெட் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இரண்டு வெவ்வேறு பரிவர்த்தனைகளில் ஒரு டிக்கெட் வாங்குபவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படாது.

ட்ரீம் கார்களுக்கான டிக்கெட் தலா 150 திர்ஹம்ஸிற்கு விற்கப்படுகின்றன. இந்த பிக் டிக்கெட் விற்பனைகள் மாதத்தின் முதல் நாளில் தொடங்கி மாதத்தின் கடைசி நாள் இரவு 11.59 மணி வரை நடக்கும்.

REFUND ஏதும் இருக்கா?

பிக் டிக்கெட் டிரா தேதிக்கு முன்னர், ஆன்லைனில் டிக்கெட் வாங்கும்போது தொழில்நுட்ப சிக்கல் ஏதும் ஏற்பட்டால் மட்டுமே டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறமுடியும். டிராவிற்கு பிறகு பணத்தைத் திரும்பப்பெற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியில் இருந்து பிக் டிக்கெட் வாங்க முடியுமா?

ஆம்.! அமீரகத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது வேறு நாட்டில் வசிப்பவர்களும் பிக் டிக்கெட் வாங்கி டிராவில் கலந்துகொள்ளலாம். வேறு நாட்டில் வசிப்பவர்கள், பிக் டிக்கெட்டுகளை மேலே குறிப்பிட்ட ஆன்லைன் முறையை பின்பற்றி டிக்கெட் வாங்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே வசிப்பவர்கள் உட்பட பல தேசிய இனங்களுக்கு பிக் டிக்கெட் ரேஃபிள் டிராக்கள் வாய்ப்புகள் அளித்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே வாழும் பங்கேற்பாளர்கள், எந்த ஒரு பிக் டிக்கெட் ரேஃபிள் ட்ராக்களில் பங்கேற்பதற்கு முன்பு அவர்களின் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கவனத்தில் கொள்ளவும் பிக் டிக்கெட் ஊக்குவிக்கிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் நடைபெறும் கிராண்ட் டிராவின் போது, வெற்றிபெற்ற வெற்றியாளர் காசோலையை பெறுவதற்கு பிக் டிக்கெட் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

துபாய் அல்லது ஷார்ஜாவிலிருந்து பிக் டிக்கெட்டை எவ்வாறு வாங்குவது?

துபாய் மற்றும் ஷார்ஜாவில் பிக் டிக்கெட் விற்பனை நிலையங்கள் அல்லது பெரிய டிக்கெட் கவுண்டர்கள் இல்லாததால், நீங்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லது அபுதாபியில் உள்ள விற்பனை மையங்களுக்குச் சென்று வாங்கலாம்.

பிக் டிக்கெட் இலவசமாக கிடைக்குமா.?

ஒவ்வொரு மாதமும் #BigTicketSelfie / #BigTicketLove என்று அழைக்கப்படும் ஒரு விளையாட்டு மூலம் நீங்கள் இலவசமாக பிக் டிக்கெட்டை வெல்லலாம். ஆம். இந்த விளையாட்டானது பிக் டிக்கெட்டால் சமூக வலைத்தளத்தில் நடத்தப்படும் ஒன்று.

இந்த விளையாட்டில் பங்கேற்க, நீங்கள் ஒரு செல்ஃபி அல்லது வீடியோவை பிக் டிக்கெட் லைவ் டிராவில் எடுத்து சமூக ஊடகங்களில் #BigTicketSelfie என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட வேண்டும். மேலும், குறிப்பாக அதே பதிவில் @BigTicketauh என்பதையும் குறிக்க(Tag) செய்ய வேண்டும்.

இந்த விளையாட்டில் நீங்கள் வெற்றிபெற்றால் நடப்பு மாதத்தின் டிராவிற்கு செல்லுபடியாகும் ஒரு இலவச டிக்கெட்டை வெல்லலாம்.

#BigTicketSelfie / #BigTicketLove விளையாட்டு முறைகள் ஒவ்வொரு மாதமும் மாறுகின்றன. எனவே பிக் டிக்கெட் அறிவிப்புகளை அவர்களின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் கவனித்தல் முக்கியம்.

பிக் டிக்கெட் லைவ் டிராவை (Live draw) பார்ப்பது எப்படி?

நீங்கள் அபுதாபி விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று பார்க்கலாம் அல்லது பிக் டிக்கெட் அபுதாபியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பார்க்கலாம்.

பிக் டிக்கெட் அபுதாபியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் – https://www.facebook.com/BigTicketAbuDhabi/

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!