UAE Tamil Web

அமீரகத்தில் நீங்கள் வாங்கிய சிம்கார்டு வெளிநாட்டில் தொலைந்துவிட்டால் என்ன செய்யவேண்டும்?

MOBILE

அமீரகத்தில் நீங்கள் வாங்கிய எதிசலாட் அல்லது டூ சிம்கார்டுகளை வெளிநாடுகளில் தொலைத்துவிட்டால் அவற்றை கேன்சல் செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

அமீரகத்தின் இருபெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான டூ மற்றும் எதிசலாட் தங்களது வாடிக்கையாளர்கள் சிம்கார்டுகளை தொலைத்துவிட்டால் தொடர்புகொள்ளவேண்டிய இலவச தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளன.

டூ சிம்கார்டுகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு:

மொபைல் வாடிக்கையாளர்கள் வேறெந்த டூ மொபைல் போனிலிருந்து 155 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். அமீரகத்தின் பிற போன் மூலமாக அழைப்பவர்கள் 800 155 என்ற எண்ணிற்கும் வெளிநாடுகளில் இருந்து அழைப்பவர்கள் +971 55 5678 155  என்ற எண்ணிற்கும் டூ நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்.

உங்களுடைய சிம்கார்டு தொலைந்துவிட்டது என நீங்கள் புகாரளித்த உடனேயே தொலைக்கப்பட்ட சிம் கார்டு நிறுவனத்தால் கேன்சல் செய்யப்பட்டுவிடும். இதன்மூலம் உங்களுடைய சிம் கார்டுகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும்.

பிசினஸ் வாடிக்கையாளர்கள் வேறெந்த டூ மொபைல் போனிலிருந்து 188 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். அமீரகத்தின் பிற போன் மூலமாக அழைப்பவர்கள் 800 188 என்ற எண்ணிற்கும் வெளிநாடுகளில் இருந்து அழைப்பவர்கள் + 971 4 3699 188  என்ற எண்ணிற்கும் டூ நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்.

ஒருவேளை உங்களுடைய சிம்கார்டு மீண்டும் கிடைத்துவிட்டால் மீண்டும் டூ நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தால், சிம்கார்டு  புதுப்பிக்கப்படும்.

எதிசலாட் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:

வெளிநாடுகளில் நீங்கள் உங்களுடைய எதிசலாட் சிம் கார்டைத் தொலைத்துவிட்டால் +971 800 2300 என்ற எண்ணிற்கு எதிசலாட் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம். உடனேயே உங்களுடைய தொலைந்துபோன சிம்கார்டு கேன்சல் செய்யப்படும்.

MOBILE
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap