UAE Tamil Web

உங்களுடைய எதிசலாட் அல்லது டூ சிம் கார்டுகளை கேன்சல் செய்வது எப்படி?

Etisalat-and-du-

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் இரண்டு விதமான சேவைகளுக்கும் (போஸ்ட்-பெய்ட் மற்றும் ப்ரீ-பெய்ட்) கேன்சல்/செயலிழக்கச்  செய்யும் வழிமுறைகள் வேறுபடும்.

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறுவதாக இருந்தாலோ அல்லது உங்கள் கணக்கில் ஒரு சில சிம் கார்டுகளை மட்டுமே வைத்துக்கொள்ள விரும்பினாலோ உங்களுடைய எதிசலாட் மற்றும் டூ சிம் கார்டுகளை கேன்சல் செய்துவிட வேண்டும் இல்லையேல் அவற்றை நிரந்தரமாக டீ-ஆக்டிவேட் செய்துவிட வேண்டும்.

முதலில் எதிசலாட் சிம் கார்டுகளை கேன்சல் செய்யும் வழிமுறைகளைக் காண்போம்.

நீங்கள் 101 என்ற இலவச எண்ணுக்கு கால் செய்ய வேண்டும். இல்லையெனில் உங்களுக்கருகாமையில் இருக்கும் எதிசலாட் ஸ்டோருக்கு சென்றும் கேன்சல் செய்ய இயலும்.

நீங்கள் ப்ரீ-பெயிட் பயனாளர் என்றால், சிம் கார்டை கேன்சல் செய்ய எந்த வித சிறப்பு நடவடிக்கையும் தேவையில்லை. ஏனெனில் உங்கள் இருப்புத் தொகை தீர்ந்த உடனேயே இதற்கான செயல்பாடு ஆரம்பமாகிவிடும். அதாவது தொடர்ந்து 12 மாதங்கள் எவ்வித பயன்பாடும் சிம் கார்டில் இல்லையெனில் அந்த எண்ணானது தானாகவே செயலிழந்துவிடும்.

போஸ்ட் – பெயிட் சிம்கார்டுகளை கேன்சல் செய்ய மை எதிசலாட் யுஏஇ (My Etisalat UAE) என்ற ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள எதிசலாட் சேவை மையத்தை அணுகலாம் அல்லது 101 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

போஸ்ட்-பெய்ட் மற்றும் தொழில் சார்ந்த சிம் கார்டுகள் என்றால் அதன் மீதான கட்டணத்தொகை செலுத்தப்பட்டவுடனேயே சிம் கார்டு செயலிழக்கம் செய்யப்படும்

இதற்காக நீங்கள் எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும், இந்த செயல்முறைக்கு அதிக காலமும் எடுத்துக்கொள்ளப்படாது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அல்லது தொழில் நிறுவனம் தனது சேவைக் கட்டணங்களை முழுமையாக செலுத்தியதும் இந்த போஸ்ட்-பெய்ட் சேவை முடிவுக்கு கொண்டுவரப்படும்.

இனி, டூ சிம் கார்டுகளை கேன்சல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நீங்கள் ப்ரீ பெய்ட் பயனாளர் எனில் நீங்கள் 155 என்ற எண்ணுக்கு கால் செய்து கேன்சல் செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்கலாம்.

போஸ்ட்-பெய்ட் பயனாளர் என்றால் அருகில் இருக்கும் டூ ஸ்டோருக்கு சென்று இது குறித்து தெரிவிக்க வேண்டும். உடன் எமிரேட்ஸ் ஐடியை எடுத்துச் செல்வது அவசியம்.

உங்களது சிம் கார்டுக்கான பழைய பாக்கித்தொகை இருப்பின் அதனை செலுத்திவிடவும்.

கேன்சல் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட பின்னர், உங்களது மாதந்திர கட்டணதேதி வரை (monthly bill cycle) போஸ்ட்-பெய்ட் சேவையானது பயன்பாட்டில் இருக்கும். அதன் பின்னர் தானாகவே அச்சேவை செயலிழந்து விடும்.