UAE Tamil Web

துபாயில் உங்களுக்கு ஏற்ற CREDIT CARD-ஐ தேர்வு செய்வது எப்படி? முழு விபரம் உள்ளே..

சரியான கிரெடிட் கார்ட் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மிக சிறமமான ஒன்று என்பதை அனைவரும் அறிவோம்.

எனவே துபாயில் சிறந்த கிரெடிட் கார்டைத் தேர்வுசெய்வது எப்படி என்று பார்ப்போம்.

எந்தக் கிரெடிட் கார்ட் வாங்க வேண்டும் எனப் பரிசீலிப்பதற்கு முன், உங்கள் செலவு பழக்கங்கள் பற்றி நீங்கள் யோசனை செய்ய வேண்டும். சாப்பாடு அல்லது பொழுதுபோக்குகளில் நிறையச் செலவழிக்கிறீர்களா? அல்லது உங்கள் செலவினங்களில் கொள்முதல் சாமான்கள் மற்றும் பயன்பாடுகளிலா? வீட்டிலிருந்து பயணிக்கும் போது விமான டிக்கெட்டுகள் அல்லது பர்சேஸ் செய்வதில் செலவழிக்கிறீர்களா? என யோசிக்க வேண்டும்.

பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் FREE FOR LIFE கிரெடிட் கார்ட் வாங்குகின்றனர். சில கார்டுகளுக்கு 2 ஆயிரம் திர்ஹம்ஸ் வருடாந்திர கட்டணங்கள் வசூலிக்கின்றனர். இருப்பினும், இந்தக் கார்டுகளும் சில நபர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையில் சில நன்மைகளை வழங்குகின்றன.

கார்டுக்கான வட்டி விகிதங்கள்?

உங்களுடைய நிலுவையிலுள்ள கிரெடிட் கார்ட் தொகையின் வட்டி விகிதங்களே மற்றும் வருடாந்திர இலாப விகிதம் 48 சதவிகிதமாக வரக்கூடும். இஸ்லாமிய வங்கிகள் ஷரியா-இணக்கமானவை, எனவே வட்டி அல்லது லாபம் நிலுவையில் உள்ள தொகைக்கு விதிக்கப்பதடுவதில்லை.

கூடுதல் கார்டு

பெரும்பாலான வங்கிகள் மெயின் கார்ட்டுகளுடன் ஒரு கூடுதல் கார்ட் அல்லது ஒரு ஆன்லைன் கொள்முதல் கார்ட் போன்ற கார்டுகளை வழங்குகின்றன. இதைப் பெறலாமா இல்லையா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்களுக்கு எதற்குக் கார்ட் தேவைப்படுமோ அதற்கு மட்டும் செலவிடுங்கள். உங்களிடம் ஏற்கனவே இருந்தால் தேவையானதை மட்டும் செயல்படுத்தவும்.

வெளிநாட்டுச் செலவுகள்

வெளிநாட்டிலும் உங்கள் கார்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வங்கியில் வெளிநாட்டுப் பயன்பாட்டு விகிதங்களைப் பற்றி விசாரிக்கவும். ஒவ்வொரு முறை கார்டு உபயோகிக்கப்படும் போதும் செயலாக்கக் கட்டணமாகச் சிலர் உங்கள் செலவில் 2 அல்லது 3 சதவீதம் வரை வசூலிக்கலாம்.

கிரெடிட் பாதுகாப்பு

உங்கள் கிரெடிட் (ஷீல்ட்) பாதுகாப்பு தேர்வை நீங்கள் செயல்படுத்தினால், இறப்பு, காயம் அல்லது துரதிர்ஷ்டமான சூழ்நிலைகளிலும் பெறுவதற்கு ஒரு சிறிய தொகை தொடர்ச்சியாக வசூலிக்கப்படும். சில சமயங்களில் இதனை நீங்கள் செலுத்த முடியாமல் போகலாம். இது உங்கள் கிரெடிட்கார்டுக்கு ஒரு காப்பீடாகும். கிரெடிட் கார்டை பெரிய செலவுகளுக்குப் பயன்படுத்த மாட்டீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அந்தத் தேர்வை நீங்கள் செயல்படுத்த வேண்டாம்.

தவணை முறை சலுகைகள்

பெரும்பாலான முன்னணி வங்கிகள் மூன்று மாதங்கள் வரை கொள்முதல்களுக்கு வட்டி இல்லா இலவச தவணைத் திட்டங்களை வழங்குகின்றன. சிறந்த தவணை விருப்பங்களைக் கொண்டிருக்கும் எந்தவொரு கார்டுகளையும் சரிபார்க்க ஷாப்பிங் செய்யலாம்.

முக்கிய குறிப்புகள்

கிரெடிட் கார்ட் வைத்திருப்பது வசதி தான், ஆனால் பெருகும் கடன் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். நிலுவையிலுள்ள அளவு மிக அதிகமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் கிரெடிட் கார்டை ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு நியாயமான தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கும் வரை உபயோகிக்காதீர்கள்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap