UAE Tamil Web

பஸ், பிக் அப் மற்றும் கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் : 20 – 50 சதவிகிதம் வரையில் தள்ளுபடி..!

அமீரகத்தில் இருசக்கர வாகனம் முதல் பேருந்து வரையில் நீங்கள் எந்த வாகனத்தை இயக்குபவராக இருந்தாலும் அதன் ஆக்ஸிலேட்டரை அழுத்துவதற்கு முன்னர் உங்களிடம் முறையான ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

ஏனென்றால், அமீரகத்தில் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் கடுமையான அபராதம் செலுத்துவதோடு சட்ட சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

ஆகவே இப்போதே உங்களுடைய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துவிடுங்கள். எப்படி எடுப்பது? யாரை அணுகுவது?

பஸ், பிக் அப் வாகனங்கள், கிரேன் மற்றும் ட்ரக் உள்ளிட்ட கனரக வாகனங்களின் தேவை அமீரகத்தில் மிக அதிகம். அமீரகம் அதன் அச்சில் சுழல காரணமாக இருக்கும் தொழில் துறையில் மேற்கண்ட வாகனங்களின் பங்கு அபரிமிதமானது. இதன் காரணமாகவே பலரும் சொந்தமாக பிக் அப் வாகனங்கள், டிரக்குகள் போன்ற கனரக வாகனங்கள் வாங்கி அமீரகத்தில் தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இன்சூரன்ஸ் குறித்த தெளிவை அளிக்கவே இந்தப் பதிவு.

அமீரகத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் இரண்டு வகையில் உங்களுடைய பஸ், பிக் அப் வாகனங்கள், கிரேன் மற்றும் ட்ரக் ஆகிய கனரக வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். முதலாவது, நேரடியாக அமீரக அரசால் அங்கீகாரம் பெற்ற காப்பீட்டு நிறுவனத்திடம் சென்று உங்களுடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது.

ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் முதலில் “நல்ல” காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு முன்னர் இந்த “நல்ல” என்பதை உறுதிசெய்ய பல காப்பீட்டு நிறுவனங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக நிறுவனம் வழங்கும் ஆஃபர், கட்டணம், மறைமுக கட்டணம், இழப்பீடு கிடைக்க செய்ய வேண்டிய வழிமுறைகள், எத்தனை நாளில் இழப்பீடு கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும் போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும். மறக்கவேண்டாம், ஒரு நிறுவனத்திற்கு அல்ல, எல்லா நிறுவனத்திற்கும் நீங்கள் சரிபார்த்து சிறந்ததை தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டாவது வகை மிக எளிமையானது. ஏற்கனவே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பற்றியும், அவற்றின் காப்பீட்டுத்தொகை போன்ற சகல விஷயங்களையும் அறிந்தவர்களால் நடத்தப்படும் அல் ராஹா இன்சூரன்ஸ் முகமை போன்ற  நிறுவனங்களை அணுகலாம்.

அமீரகத்தில் உள்ள அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கட்டணம், இன்சூரன்ஸ் வழிமுறைகள் ஆகியவை குறித்து நிறுவனமே விளக்கும். இதன்மூலம் உங்களுக்கான சிறந்த பாலிசி எது என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்.

இதற்காக நீங்கள் நிறுவனத்தைத்தேடி வரவேண்டிய அவசியமில்லை. எல்லா படிநிலைகளும் இணையம் மூலமாகவே நடைபெறும். ஆதலால் அலைச்சல் என்னும் பேச்சுக்கே இடமில்லை. உங்களுடைய வாகனங்களின் தகவல்களை மட்டும் அளித்து உங்களுக்கான இன்சூரன்ஸைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சேவையைப் பெற நீங்கள் அமீரகத்தின் எந்த எமிரேட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களிடம் 3 நிமிடம் இருந்தால் மட்டும் போதும். உங்களுடைய வாகனத்திற்கான இன்சூரன்சை அல் ராஹா இன்சூரன்ஸ் முகமை பெற்றுத்தரும்.

20 – 50 சதவிகித தள்ளுபடி

உங்களுடைய வாகனங்களுக்கான காப்பீட்டுத்தொகையில் 20 முதல் 50 சதவிகிதம் வரையில் தள்ளுபடியும் இந்நிறுவனம் தருகிறது. நீங்கள் நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சென்றால் உங்களுக்கு இத்துணை தள்ளுபடி நிச்சயம் கிடைக்காது.

இன்னும் என்ன? உங்களுடைய பழைய மற்றும் புது வாகனத்திற்கான இன்சூரன்ஸை இன்றே மிகக் குறைந்த விலையில் பெற்றிடுங்கள்.

தொடர்புக்கு

தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் அரபி ஆகிய மொழிகளில் நீங்கள் இந்த நிறுவனத்துடைய வாடிக்கையாளர் சேவை மைய அலுவலரிடம் உரையாடலாம்.

பின்குறிப்பு: காருக்கு இன்சூரன்ஸ் எடுக்க விரும்புபவர்களும் மேற்கண்ட எண்ணினைத் தொடர்புகொள்ளலாம்.