fbpx
UAE Tamil Web

அமீரகத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இந்தப் பணிகளுக்குத் தான் டிமாண்ட் அதிகம் – சம்பளத்தைக் கேட்டால் ஆடிப்போய்டுவீங்க..!

1140-job-seach-online-tools-reseach-employment

உலகமே நிச்சயமில்லாத தன்மையில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆகவே திறமைகளைக் காட்டிலும் பணியாளரிடம் ஒரு நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கும் விஷயமாக மாறியிருக்கிறது இடர் மேலாண்மை அதாவது risk management.

குளோபல் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் ஹாப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் அமீரகத்தில் அதிக ஊதியம் பெறும் பணியாக தலைமை இடர் மேலாண்மை அலுவலர் பணி (Chief Risk Officer) குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான ஊதிய வழிகாட்டியை வெளியிட்டுள்ள ராபர்ட் அதில் அமீரகத்தில் எந்தெந்த பணிகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது, அதிக ஊதியம் கிடைக்கும் பணிகள் எவை எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கொரோனா சமயத்தில் சூழ்நிலையை எதிர்த்து செயலாற்றும் திறனுள்ள துறைகளாக மருந்தக, மக்கள் பயன்பாடு, நுகர்வோர்களால் அதிகம் வாங்கப்படும் பொருட்கள் ஆகியவை இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

job 2
Image Credit: Gulf News

அதிக டிமாண்ட் உள்ள பணிகள்

அமீரகத்தில் அதிக டிமாண்ட் உள்ள பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு (Financial planning and analysis)
  • நிதி மேலாளர் (Finance manager)
  • நிர்வாக உதவியாளர்கள் (Executive assistants)
  • தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer)
  • மனிதவள மேம்பாட்டு அதிகாரி (HR Officer)கொரோனா காரணமாக தற்போது தொலைதூர பணி செய்யும் வாய்ப்பு போன்ற திட்டங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இவ்வேளையில் தகவமைப்பு, எதிர்கொண்டு வெற்றிபெறுதல், தகவல் தொடர்பு, தலைமைப் பண்பு மற்றும் பிறரின் தேவைகளைப் புரிந்துகொள்தல் போன்றவை இன்றியமையாத குணங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.இனி அமீரகத்தில் அதிக ஊதியம் கிடைக்கும் துறைகள் மற்றும் பணிகளை கீழே காண்போம்.

    கணக்கியல் மற்றும் நிதித்துறை

    பணி வருட ஊதியம் (சிறு மற்றும் குறு நிறுவனங்களில்)

    திர்ஹம்களில்

    வருட ஊதியம் (பெரு நிறுவனங்களில்)

    திர்ஹம்களில்

    நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு மேலாளர் (Financial Planning and Analysis Manager) 301,937 – 453,640 359,973 – 541,062
    கடன் மேலாளர் (Credit Manager) 254,552 – 374,299 298,263 – 398,174
    தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) 720,314 – 1.39மில்லியன் 840,800 – 1.56மில்லியன்
    திட்ட நிதி மேலாளர் (Project Finance Manager) 378,339 – 385,686 360,340 – 534,083

    நிதி சேவைகள் (Financial services)

    அதிக டிமாண்ட் உள்ள பணிகள்

    • தொழில் மேம்பாடு (Business Development)
    • வர்த்தகர்கள் (Traders)
    • நிதி தலைமை (Head of Finance)
    பணி வருட ஊதியம்  

    திர்ஹம்களில்

    இடர் மேலாண்மை தலைமை அதிகாரி (Chief Risk Officer) 1.08மில்லியன்- 1.8மில்லியன்
    வர்த்தகம் / சேவை மேலாண்மை தலைமை அதிகாரி (காப்பீடு மற்றும் மறுகாப்பீட்டு எழுத்துறுதி) (Head of Trading/Portfolio Management) (Insurance and Reinsurance Underwriting) 840,428- 1.38மில்லியன்
    தொழில் மேம்பாட்டு மேலாளர் (காப்பீடு மற்றும் மறுகாப்பீட்டு தரகு) (Business Development Manager) (Insurance and Reinsurance Broking) 240,227 – 480,454
    தலைமை அந்நிய செலவாணி விற்பனையாளர் (உலகளாவிய சந்தை) (Head of FX Sales) 516,451 – 720,681

    தொழில்நுட்பம்

    அதிக டிமாண்ட் உள்ள பணிகள்

    • மென்பொருள் பொறியாளர் (Software Engineer)
    • தரவு ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் (Data Analysts and scientists)
    • சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் (Cyber Security Specialists)
    பணி வருட ஊதியம்  

    திர்ஹம்களில்

    10 வருட அனுபவமுள்ள தகவல் தொழில்நுட்ப மேலாளர்  (IT Manager with over 10 years’ experience) 385,686 – 600,568
    தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு ஆய்வாளர் (IT Security Analyst) 204,22 – 420,214
    மேம்பாட்டு மேலாண்மை (சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட்) (Development Management) (Software development) 359,973 –  598,364

    மனிதவள மேம்பாடு, வணிக மற்றும் அலுவலக உதவி (Human Resources, Business and Office support)

    அதிக டிமாண்ட் உள்ள பணிகள்

    • மனிதவள வல்லுநர் (HR Generalist)
    • மனிதவள ஆலோசகர் (HR Consultant)
    • நிர்வாக உதவியாளர் (Executive assistant)
    பணி வருட ஊதியம்  

    திர்ஹம்களில்

    மனிதவள மேம்பாட்டு இயக்குனர்  (HR Director) 778,718 – 1.31மில்லியன்
    தலைமை மனிதவள மேம்பாட்டு அலுவலர் (Head of HR) 600,494 – 1.08 மில்லியன்
    மனிதவள மேம்பாட்டு மேலாளர் (HR Manager) 300,265 –  540,327
    நிர்வாக உதவியாளர் (Executive Assistant) 240,227 – 359,973

    சட்டம் சார்ந்த துறைகள்

    • சட்டத் தலைவர் (Head of Legal)
    • மூத்த சட்ட ஆலோசகர் (Senior Legal Counsel)
    • மூத்த அசோசியேட் (Senior Associate)
    • சட்ட ஆலோசகர் (Legal Counsel)
    பணி வருட ஊதியம்  

    திர்ஹம்களில்

    சட்டத் தலைவர் (Head of Legal) 955,032 – 1.56மில்லியன்
    மூத்த சட்ட ஆலோசகர் (6-9 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு) (Senior Legal Counsel) 600,568 – 809,940
    மூத்த அசோசியேட் (Senior Associate) 587,712-  918,300
    சட்ட ஆலோசகர் (3 -5 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு) (Legal Counsel) 326,914 – 571,182