UAE Tamil Web

அமீரகம்: உங்களது வீடு அல்லது அலுவலகத்தை குறைவான கட்டணத்தில் சுத்திகரிப்பு செய்யவேண்டுமா? எங்கு? யாரை அணுகலாம்?

Disinfection Services

சுத்திகரிப்பு. இந்த வார்த்தையைப் படித்தவுடன் உங்களுக்கு கொரோனா ஞாபகம் வந்திருக்கலாம். கொரோனா வைரஸிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள அமீரகம் முழுவதும் பொது இடங்களில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தது இல்லையா?. ஆனால் கொரோனா மட்டுமல்லாது அனைத்து வகையான வைரஸ்/பாக்டீரியா/பூஞ்சைத் தாக்குதலில் இருந்து நம்முடைய சுற்றுபுறத்தினைப் பாதுகாக்க சுத்திகரிப்பு அவசியம். நாம் சுவாசிக்கும் காற்று, நாம் தொடும் இடங்கள் மூலமாகவும் நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் இருக்கிறது.

அதற்கெல்லாம் முதலில் சானிடைசிங் மற்றும் டிஸ்இன்ஃபெக்ஷன் (Sanitizing and Disinfection) பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். சானிடைசிங் என்பது நம்மைச்சுற்றியுள்ள பொருட்களில் படிந்திருக்கும் பாக்டீரியா / வைரஸ்களை மேலும் பரவச்செய்யாமல் தடுப்பது. இது ஒருவகை சுத்தப்படுத்தும் பணியாகும். ஆனால் டிஸ்இன்ஃபெக்ஷன் என்பதோ கிருமிகளை அழிப்பது. நாம் தினந்தோறும் வீடுகளில் அல்லது அலுவலகங்களில் பயன்படுத்தும் அத்தனை பொருட்களிலும் நம் கண்ணுக்குப்புலப்படாத வைரஸ்கள், பாக்டீரியா அல்லது பூஞ்சைகள் இருக்கும் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

இவற்றை நாம் தொடுவதன் மூலமாகவோ, காற்றில் இருக்கும் அவற்றை சுவாசிப்பதன் மூலமாகவோ உள்ளிழுப்பதன் மூலமாகவோ நம்முடைய உடல் இந்த நுண்ணியிர்களால் பாதிப்படையலாம். இதன்காரணமாகவே சானிடைசிங் மற்றும் டிஸ்இன்ஃபெக்ஷன் அத்தியாவசியமாகிறது. இப்பணிகளை குறைந்த செலவில் மேற்கொண்டுவருகிறது எம்பையர் குரூப் (Empire Group) நிறுவனம்.

அபுதாபி தவிர்த்து மற்றைய ஆறு எமிரேட்களிலும் பரவியிருக்கும் இந்நிறுவனம் குறைவான கட்டணத்தில் உங்களுடைய வீடு அல்லது அலுவலகங்களை சுத்திகரிப்பு செய்துதருகிறது.

எலெக்ட்ரோஸ்டாடிக் டெக்னாலஜி

உங்களுடைய வீடுகள் அல்லது அலுவகங்களில் உள்ள சிக்கலான மூலை முடுக்குகளில் படிந்துள்ள நுண்ணுயிர்களை அழிக்க சாதாரண பழைய முறையிலான சுத்திகரிப்பு பணி ஏற்புடையதல்ல. அவற்றை மேற்கொள்வதன் மூலமாக இடங்களை முழுமையாக சுத்தப்படுத்திட முடியாது. அதற்காகவே எம்பையர் குரூப் நிறுவனம் எலெக்ட்ரோஸ்டாடிக் டெக்னாலஜி மூலமாக சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.

எலெக்ட்ரோஸ்டாடிக் கன் (electrostatic gun) மூலமாக சிக்கலான இடங்களிலும் சுத்திகரிப்பானை அதிவேகத்தில் செலுத்தி நுண்ணுயிர்களை அழிக்கமுடியும். காற்றில் நீராவியில் மறைந்திருக்கும் கிருமிகளும் இந்த எலெக்ட்ரோஸ்டாடிக் கன்னின் குறியில் இருந்து தப்புவதில்லை.

கிருமி நீக்கப் பணியின்போது பயன்படுத்தப்படும் அமிலங்கள் அனைத்தும் துபாய் நகராட்சியினால் அங்கீகரிக்கப்பட்டவை. இதனால் நம்முடைய உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. இடங்களுக்கு ஏற்ப அமிலமில்லா சுத்திகரிப்பானும் (chemical-free sanitizers ) பயன்படுத்தப்படுகிறது.

 • வீடுகள்/வில்லா/அடுக்குமாடி குடியிருப்புகள்
 • அலுவலகக் கட்டிடங்கள்
 • நர்சரி மற்றும் பள்ளிகள்
 • கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
 • கபே,ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள்
 • ஷாப்பிங் மால்கள்
 • கடைகள்
 • காஃபிடீரியா
 • கேண்டீன்கள்
 • ஸ்டோர்/ கிடங்குகள்

என அமீரகத்தின் பல்வேறு நிறுவனங்களின் சுத்திகரிப்புத் தேவையை எம்பையர் குரூப் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாகப் பூர்த்தி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

எதற்காக எம்பையர் குரூப் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்?

 • 10 வருட அனுபவமுள்ள பணியாளர்கள்.
 • துபாய் நகராட்சியின் அங்கீகாரம்.
 • எந்நேரமும் கிடைக்கும் சேவை.
 • உங்களுக்கு ஏற்ற கட்டணம்.
 • அபுதாபி தவிர்த்து அமீரகத்தின் ஆறு எமிரேட்களிலும் இந்நிறுவனம் தனது சேவையை வழங்கிவருகிறது

தொடர்புக்கு

Disinfection Services
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap