UAE Tamil Web

உங்களுடைய தொழிலில் நீங்கள் எதிர்பாத்திடாத அளவு லாபத்தை ஈட்டித் தருகிறோம் – அப்படியில்லையேல் நீங்கள் கொடுத்த பணம் 100% வாபஸ்..!

Grow Your Business

தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தேதீரும். தொழில் கல்வியில் இது பாலபாடம். யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் நவீனத்துவம் வாய்ந்த உலகில் உங்களது தொழிலில் வரும் இறக்கங்களை முக்காலே மூன்றுவீசம் குறைக்கலாம். இந்த சத்தியத்திற்கு சாட்சியாக இன்றைய உலகில் கொடிகட்டிப்பறக்கும் அத்தனை தொழிலதிபர்களின் கதைகளையும் சொல்லலாம். அவர்களுடைய கதை நமக்குச் சொல்வது ஒன்றைத்தான். லாபத்தைக் குறித்து மட்டுமே எப்போதும் சிந்திக்காதீர்கள். வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முயற்சியுங்கள் என்பதுதான் அது. மேலே சொன்ன அத்தனை தொழிலதிபர்களும் தங்களது வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதைத் தான் தங்களுக்கான அரண்மனைகளுக்கு அஸ்திவாரம் ஆக்கியிருக்கிறார்கள்.

வீழ்ச்சியைக் குறைத்துவிட்டாலே லாபம் என்னும் வெளிச்சக்கதவின் சாவி கையில் கிடைத்துவிடும். சரி, வீழ்ச்சியை எப்படிக் குறைப்பது. உங்களுக்கும் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான தொடர்பு எப்போது அதிகரிக்கிறதோ அப்போது உங்களுடைய தொழிலில் நஷ்டம் என்ற சொல் தேய்ந்து ஒருகட்டத்தில் இல்லாமலேயே போகும். உங்களுடைய தொழில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதனை தழைக்கச் செய்ய வேண்டுமானால் உங்களுக்கான வாடிக்கையாளர்களை நீங்கள் தேடிக் கண்டடைய வேண்டும். வெற்றிக்கான முதல்படி அதுதான்.

அதனைக்கடக்க உங்களுடைய தொழிலை சந்தைப்படுத்த தெரிந்திருக்க வேண்டும் அதாவது மார்கெட்டிங். எத்தனை பெரிய திறமையான உற்பத்தியாளரும் திணறும் இடம் அது. ஒரு உதாரணம் சொல்கிறேன். கேளுங்கள். தேர்ந்த சிற்பி ஒருவர், இரவுபகல் பாராமல் நுட்பமாக சிலைவடித்து பொருட்களை அவரே விற்பனை செய்கிறார். அவருடைய படைப்பு உண்மையில் படைப்புலகத்தின் மைல்கல்லாகவே இருந்தாலும் அதன் பெருமையோ, சிற்பியின் திறமையோ வெளியுலகத்திற்குத் தெரியும் வரையில் அவர் கலைஞனாக இருக்கலாமே தவிர காசுபார்க்க முடியாது. இதுதான் நடைமுறை. இப்படி பலரையும் உங்களுடைய வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள். இப்போது உங்களுடைய வாடிக்கையாளர்களைக் கண்டடைவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இங்கேதான் டிஜிட்டல் மார்கெடிங் நிபுணர்களின் தேவை உருவாகிறது. உங்களுடைய தொழிலைப் பற்றி வெளியுலகத்திற்கு எடுத்துச்சொல்லும் கட்டியங்காரர்கள் தான் இந்த மார்கெட்டிங் வல்லுனர்கள். இப்படிச் சொல்வோம்.. நீங்கள் பெயிண்டிங் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறீர்கள். ஒரு 10 ஆண்டுகளுக்கு என வைத்துக்கொள்வோம். நீங்கள் வசிக்கும் நகரத்தில் அல்லது ஊரில் உங்களது தொழிலைக் குறித்து எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? உங்களுடைய முன்னாள் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் மூலமாக பரவும் செய்திகள் தான் உங்களுக்கான தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கும். ஆனால், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கைப் பொறுத்தவரையில் நீங்கள் 10 ஆண்டுகளில் பெற்ற வாய்ப்புகளை உங்களால் ஒரே மாதத்தில் பெற முடியும். எப்படி எனக் கேள்வி எழலாம். இணையத்தின் நம்ப முடியாத வீச்சு இதன் பின்னால் இருக்கிறது. இணையமும் அதன் பயன்பாடும் கடைசி பத்தாண்டுகளில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதனை உங்களது சந்தையாக மாற்றிக்கொள்வதன் மூலமாக, உங்களால் எளிதில் வாடிக்கையாளர்களைக் கண்டடைய முடியும்.

சரி, நம்பகமான டிஜிட்டல் மார்கெட் நிபுணர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? இருக்கவே இருக்கிறது ரெப்டஸ் நிறுவனம். உலகம் முழுவதிலும் பல நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மார்கெட்டிங் செய்துவரும் இந்த நிறுவனம் தொழில்முனைவோர்களின் வரப்பிரசாதமாகும். நூற்றுக்கும் மேற்பட்ட பெரு/சிறு/குறு நிறுவனங்களுக்கு மார்கெட்டிங் செய்துவரும் இக்குழுமம் கால்பதித்த இடங்களில் எல்லாம் வாகைப் பூக்களையே வென்றெடுத்திருக்கிறது. ஆழமான மார்கெட்டிங் அறிவுள்ள நிபுணர்கள், அதிகமான அனுபவம், அசாத்திய தொழில்நுட்ப முறைமைகள் இதுதான் ரெப்டஸ் நிறுவனத்தின் பலம். அதனால் தான், உங்களுடைய தொழில் எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டவில்லை எனில் மொத்த கட்டணத்தையும் திருப்பியளிப்பதாக இந்நிறுவனத்தால் சொல்ல முடிகிறது.

ரெப்டஸ் வழங்கும் சேவைகள்

  • Web Design
  • Search Engine Optimization (SEO)
  • Search Engine Marketing
  • Social Media Marketing
  • Email Marketing
  • SMS Marketing

இதெல்லாம் என்ன என்பதைப் பார்த்துவிடலாம். சிம்பிள் தான்.

Web Design

எளிமையாகச் சொல்லவேண்டுமானால் உங்களுடைய தொழிலுக்கான இணையதளத்தை உருவாக்குதல். ஒருவேளை உங்களிடம் ஏற்கனவே இணையதளம் இருந்தால் அதனை மேம்படுத்துவது.

Search Engine Optimization (SEO)

மார்கெட்டிங்கைப் பொறுத்தவரையில் SEO முக்கியமானதாகும். உதாரணமாக நீங்கள் இணையத்தில் ஒரு சேவையைத் தேடுகிறீர்கள். அதே பெயிண்டிங் கதைக்கு வருவோம். பெயிண்டிங் குறித்து இணையத்தில் தேடிய பின்னர் திரையில் வரிசையாக பெயிண்டிங் சேவை வழங்கும் நிறுவனங்களின் இணையதளங்கள் வந்துநிற்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்த வரிசையில் உங்களுடைய இணையதளத்தை முதலிடத்தில் வைப்பதே SEO எனப்படுகிறது.

Search Engine Marketing

இதுவும் கிட்டத்தட்ட SEO போலத்தான். ஆனால் அங்கே தொழில்நுட்ப முறைமைகள் மூலமாக உங்களுடைய இணையதளத்தை முதலிடத்தில் வைப்பது. Search Engine Marketing – ல் விளம்பரம் மூலமாக உங்களுடைய இணையதளத்தினை முதலிடம் பிடிக்க வைப்பது. இணையத்தில் தேடும்போது முதல் இடத்தில் நிற்கும் இணையதளத்தின் பக்கத்தில் Ad என்று ஒட்டிக்கொண்டிருக்குமே. அதுதான். அவ்வளவுதான்.

Social Media Marketing

இது உங்களுக்குப் பரீட்சியமான ஒன்றுதான். சமூக வலைத்தளங்கள் மூலமாக உங்களுடைய வாடிக்கையாளரை கவரும் முறை.

Email மற்றும் SMS Marketing

உங்களுடைய தொழில் சேவைகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்த தகவல்களை மின்னஞ்சல் மற்றும் SMS மூலமாக மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது. இதற்கான தரவுத்தளம் முழுமையும் ரெப்டஸ் வைத்திருக்கும்.

மேற்கண்டவை எல்லாம் சேவை குறித்த சொற்ப அறிமுகங்களே.. இவற்றின் பின்னால் பல தொழில்நுட்ப வல்லுனர்களின் வேலை ஒளிந்திருக்கிறது.

ரெப்டஸ் குறித்து பேசிய AMCON நிறுவனத்தின் உரிமையாளர்,” இணையம் மூலமாக எங்களது தொழிலை மேம்படுத்தலாம் என என்னிடம் சொல்லப்பட்டபோது நான் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. ஆனால் ரெப்டஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றத் துவங்கிய உடன் புதிய வாடிக்கையாளர்களின் வருகை மூன்று மடங்கு அதிகரித்தது. என்னிடம் சொன்னதை அவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள்” என்கிறார்.

“தவறுதலான மார்கெட்டிங் முயற்சிகளால் பாதிக்கப்பட்டிருந்த தொழிலை ரெப்டஸ் மேம்படுத்த உதவியது என்பதை மறுக்க முடியாது” என்கிறது துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் EMPIRE GROUP நிறுவனம்.

இதேபோல ரெப்டஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளரான MMTS நிறுவனத்தின் உரிமையாளர் பேசுகையில்,”உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் முதலில் தயக்கத்துடன் தான் கால்பதித்தோம். ரெப்டஸ் எங்களுக்கு நம்பிக்கையளித்தது. அதற்கான அறுவடையை நேரில் பார்த்தபோது சரியான குழுவுடன் தான் இணைந்து செயல்படுகிறோம் எனத் தோன்றியது. இப்போது பல புதிய வாடிக்கையாளர்கள் எங்களுக்குக் கிடைக்க ரெப்டஸ் தான் முக்கியக் காரணம்” என்றார்.

இதெல்லாம் ஒரு சோறு மட்டுமே. இன்னும் பானை பாக்கியிருக்கிறது. இன்றே ரெப்டஸ் நிறுவனத்துடன் இணைந்து உங்களுடைய தொழிலை லாபகரமானதாக மாற்றிடுங்கள். அப்படி உங்களுக்குத் திருப்தி இல்லையேல் நீங்கள் செலுத்திய கட்டணம் 100 % திருப்பியளிக்கப்படும். இது ரெப்டஸ் நிறுவனம் தனது நிபுணர்களின் திறமையின் மீது கட்டும் பந்தயம். ரெப்டஸ் இதுவரை அதில் தோற்றதேயில்லை என்ற வரலாற்றுப் பயணத்தில் நீங்களும் அங்கமாகிடுங்கள்.

தொடர்புக்கு:

Grow Your Business
1 Share
Share via
Copy link
Powered by Social Snap