UAE Tamil Web

துபாயில் தொழில் துவங்க ஆசையா? எங்கே, எப்படி துவங்குவது?

நீங்கள் துபாயில் வெகுநாட்களாக வசிப்பவராக இருந்தால் உங்களது வாழ்வின் ஒரு முறையாவது இங்கே தொழில் துவங்கலாம் என்னும் எண்ணம் உங்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். ஆனால் அதனை எப்படி துவங்குவது? நம்மால் முடியுமா? என்பதுபோன்ற எண்ணங்களும் உங்களுக்குள் அலைமோதியிருக்கும்.

- Advertisment -

ஆனால் சரியான வழிகாட்டுதலின்படி நீங்கள் உங்களுடைய கனவினைத் துரத்தினால் வளமான எதிர்காலம் எட்டும் தொலைவில் தான் உள்ளது என்பது நிச்சயம். தொழில்முனைவோராக விருப்பப்படும் உங்களுடைய ஆசையை நிறைவேற்ற நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதனை இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

பல வளர்ந்துவரும் தொழில் முனைவோரிடம் உங்களுடைய  கனவு எதுவெனக்கேட்டால் துபாயில் சொந்தமாக தொழில் துவங்குவதுதான் என பலரும் சொல்வார்கள். ஏனெனில் தொழிலதிபர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கவும் அவர்களை சரியான நேரத்தில் ஆதரிக்கவும் துபாய் போல வேறொரு நகரம் கிடையாது என்றே சொல்லிவிடலாம்.  அதன் காரணமாகவே அமீரகத்தின் தொழில்மையம் என்னும் இடத்தை துபாய் தொடர்ந்து தக்கவைக்கிறது.

பெருநிறுவன கொள்கைகளில் தாராளவாதம், அளவில்லா வாய்ப்புகள், வரி விலக்குகள் மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரம் ஆகிய காரணங்களை கவனித்தாலே தொழில்முனைவோர் தங்களது தொழிலுக்காக ஏன் துபாயைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது விளங்கும்.

ஏன் துபாயைத் தேர்ந்தெடுக்கவேண்டும்?

1. மத்திய கிழக்கின் வர்த்தக மையம்

புவியியல் ரீதியாக துபாயின் அமைவிடமே கிழக்கையும் மேற்கையும் இணைப்பதாக இருக்கிறது. இதுவே துபாயை வர்த்தகத்திற்கான மையமாக உருவெடுக்க வைத்திருக்கிறது. மிகச்சிறந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்துறைகளை தன்னிடத்தே கொண்டிருக்கும் துபாயில் தொழில் துவங்க உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் படையெடுத்துவருகிறார்கள்.

2. வளர்ந்துவரும் பொருளாதாரம்

துபாயின் பொருளாதாரம் பன்முகத் தன்மை கொண்ட வலுவான அடித்தளத்தினைக் கொண்டுள்ளது. துபாயின் குறிப்பிடத்தக்க GDP க்கு காரணம் எண்ணெய் ஏற்றுமதி என்ற எண்ணம் உங்களுக்கு வருகிறதா? நீங்கள் நினைத்தது தவறு. ஆமாம். துபாயின் GDP யில் பெருமான்மையான பங்கினை அளிப்பவை சுற்றுலா, போக்குவரத்து நிதித் துறை, ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தகம் ஆகியவைதான்.

புதுமையான திட்டங்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நகரமாக துபாய் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொருளாதாரத்தை முன்னேற்ற பல்வேறு புதிய கொள்கை முடிவுகளையும் துபாய் எடுத்துவருகிறது.

3. சிறப்பான உட்கட்டமைப்பு

துபாயில் தொழில்துவங்க இருப்போர்களுக்கு சிறப்பான உட்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகள் செய்துதரப்படுகின்றன. ஏன் துபாயை உலககெங்கிலும் உள்ள தொழில்முனைவோர்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு இதுவும் மிக முக்கிய காரணமாகும்.

4. வரி விலக்குகள்

வெளிநாட்டில் தொழில்துவங்க வேண்டுமென்றால் வரி செலுத்துவது தவிர்க்க முடியாததுதான் ஆனால் துபாயில் அப்படியல்ல. துபாயின் சில குறிப்பிட்ட பகுதிகளில் தொழில் துவங்க உங்களுக்கு 100 சதவிகித வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் வருமான வரி நெறிமுறைகளில் விலக்கு தரப்படுகிறது. இங்கே முதலீட்டாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தொழில் துவங்க ஏற்ற நகரங்களின் பட்டியலில் துபாய் முன்னிலை பெறுவதற்கு இதுவும் காரணம்.

5. சட்ட கட்டமைப்பு

துபாயில் புதிய தொழில்களை துவங்க விருப்பப்படுவோரை ஈர்க்கும் வகையில் தன்னுடைய முதலீட்டாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து துபாய் எளிமைப்படுத்திவருகிறது. தொழில் முனைவோர் தங்களுடைய தொழிலை பதிவு செய்யவும் அதற்கு உரிமம் வாங்கவும் தேவையான சட்டப்பூர்வ ஆவணப் பணிகள் மிக மிக எளிமையானவை.

6. தொழிலாளர்கள் கிடைக்கும் வீதம்

உலகம் முழுவதிலும் இருந்து திறமை படைத்த மற்றும் பகுதி திறமை கொண்ட பணியாளர்கள் புதிய வேலைவாய்ப்புகளை நாடி துபாய் வருகின்றனர். ஆகவே, உங்களுடைய தொழிலுக்கு ஏற்ற, நீங்கள் எதிர்பார்க்கும் திறமை வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பது மிக சுலபம்.

துபாயில் எங்கே தொழில் துவங்கலாம்?

துபாயில் ஏன் தொழில் துவங்க வேண்டும் என்பதை சென்ற பத்திகளில் தெரிந்துகொண்டீர்கள். ஒரு தொழில் செழித்து வளர அது அமையும் இடம் மிக முக்கியமானதாகும். துபாயில் உங்களுக்கு மூன்று பகுதிகளில் தொழில் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அவை பற்றி கீழே காணலாம்.

1. மெயின்லான்ட் (Mainland)

மெயின்லான்ட் என்பது தமிழில் மையப் பகுதி எனப் பொருள்படும். இந்த பகுதிகளில் தொழில் துவங்கும் தொழில்முனைவோருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். மெயின்லாண்டில் நீங்கள் தொழில் துவங்க விரும்பினால் உங்களுக்கு ஓர் ஏமிராட்டி ஸ்பான்சர் தேவை.

உங்களுடைய தொழிலுக்கான மூலதனத்தில் ஏமிராட்டி ஸ்பான்சர் 51 சதவிகிதமும், நீங்கள் 49 சதவிகிதமும் முதலீடு செய்திருக்க வேண்டும். இங்கு பெறப்படும் தொழில் உரிமங்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக உங்களுடைய தொழில் வளர்ச்சி நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும்.

2. ஃப்ரீ சோன் (Free Zone)

ஏமிராட்டி ஸ்பான்சரை நாடுவது உங்களுக்கு வேண்டாம் என்றால் இருக்கவே இருக்கிறது இந்த இலவச பகுதிகள் எனப்படும் இந்த ஃப்ரீ சோன். இப்பகுதிகளில் தொழில் துவங்க உங்களுடைய நிறுவனத்தில் ஏமிராட்டி ஸ்பான்சரின் முதலீடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுடைய நிறுவனத்தின் 100 சதவிகித முதலீட்டை நீங்களே செய்யலாம்.

புதிய தொழில்கள், சிறு மற்றும் குறு தொழில்களுக்கு இந்தப் பகுதிகள் மிகச்சிறந்தவை. இங்கு துவங்கப்படும் தொழில்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி கட்டணங்கள், பெருநிறுவனங்களுக்கான வரி, வருமான வரி மற்றும் பெர்சனல் டாக்ஸ் எனப்படும் சுய வரி ஆகியவையிலிருந்து விலக்கு தரப்படுகிறது.

3. ஆஃப்ஷோர் (Offshore)

ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்ட இடத்தில் செயல்படாமல் வேறு இடத்தில் தனது பணிகளை மேற்கொண்டால் அது இத்தகைய வகைப்பாட்டின் கீழ்வரும். இந்த பகுதிகளில் நீங்கள் தொழில் துவங்கினாலும் உங்களுக்கு ஏமிராட்டி ஸ்பான்சர் இருக்கவேண்டும் எனத் தேவையில்லை.

வரி விலக்கு, முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் சட்ட மற்றும் விதிமுறைகள் ஆகியவை காரணமாக பெரும்பாலான தொழில்முனைவோர் இந்த ஆஃப்ஷோர் பகுதிகளை விரும்புகிறார்கள்.

துபாயில் தொழில் துவங்க யாரிடம் உதவி பெறுவது?

உங்களுடைய தொழில் குறித்து அசாத்தியமான ஞானம் உங்களுக்கு இருந்தாலும் துபாயில் தொழில் துவங்க அனுபவம் வாய்ந்த திறமையானவர்களிடம் உதவிபெறுவது சிறந்தது. ஏனெனில் உங்களுடைய வாழ்வின் லட்சியத்தை சுமக்கும் வேளையில் எந்த இடத்திலும் நீங்கள் கவனமாக, மிக கவனமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.

ஆகவே துபாயில் தொழில் துவங்கத் தேவையான படிப்படியான வழிமுறைகளை உங்களுக்கு எளிமையான முறையில் அளிக்கிறார்கள் கில்டன்ஸ் வணிக அமைவு சேவை நிறுவனம் (Kiltons Business Setup Services)

1999 ஆம் ஆண்டு முதல் துபாயில் தொழில் துவங்குபவர்களுக்கான ஆலோசனைகளை இந்நிறுவனம் வழங்கிவருகிறது. இன்று துபாயில் ஆலமரமாக வளர்ந்து நிற்கும் பல்வேறு நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் துபாயில் முதன்முதலாக தங்களது வேர் பரப்ப காரணமாக கில்டன்ஸ் நிறுவனம் இருந்திருக்கிறது.

தொழில் துவங்கத் தேவையான சட்ட விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவாக அறிந்திருக்கும் இந்நிறுவனம் உங்களுடைய தொழிலை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்ல மிக உதவியாக இருக்கும்.

  • மெயின்லான்ட், ஃப்ரீ சோன் மற்றும் ஆஃப்ஷோர் ஆகிய இடங்களில் தொழில் துவங்க உரிமம் பெறுவது,
  • உங்களுக்கான ஏமிராட்டி ஸ்பான்சரை தேர்ந்தெடுத்தல்,
  • உங்களுக்கான கணக்குத் துவங்குதல்,
  • மக்கள் தொடர்பு சேவைகள்,
  • தொழிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தல்

என உங்களுக்கு மலைப்பாக இருக்கும் எல்லா படிநிலைகளிலும் கில்டன்ஸ் உங்களுக்கு உதவும். ஆகவேதான் வல்லுனர்கள் பலர் துபாயில் புதிதாக தொழில் துவங்குபவர்கள் கில்டன்ஸ் நிறுவனத்திடம் உதவி கோருவதை எப்போதும் சிறந்த முடிவாகப் பார்க்கின்றனர்.

தற்போது உங்களுக்கு துபாயில் தொழில் துவங்க செய்ய வேண்டியவை பற்றி அடிப்படை புரிதல் கிடைத்திருக்கும். எதிர்காலத்தை உங்கள் வசமாக்க, இத்தனை நாள் கனவாகவே இருந்த உங்கள் எண்ணத்தை நிஜமாக்குவதற்கு ஏற்ற காலம் தற்போதே துவங்குகிறது. உங்களுடைய வளமான எதிர்காலத்தை இன்றே கில்டன்ஸ் நிறுவனத்துடன் துவங்குங்கள்.

தொடர்புக்கு: