அமீரகத்தில் இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது எனில், யாருக்கு அழைக்க வேண்டும்? எந்த எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.
உதாரணமாக விபத்து, மருத்துவ அவசரம், உங்களுடைய இருப்பிடத்தில் தீ விபத்து என்றால் எந்த எண்ணிற்கு அழைக்கவேண்டும் என்பதைக் கீழே காண்போம்.
அவசர அழைப்பு எண்கள்
காவல்துறை – 999
ஆம்புலன்ஸ் – 998
தீயணைப்புத்துறை (சிவில் பாதுகாப்பு) – 997
கடலோர காவல்படை – 996
மின்சார துண்டிப்பு – 991
அவசரமில்லா அழைப்பு எண்கள்
எதுவாகினும் அவசர சூழ்நிலைகளில் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்தவேண்டும். வேறு துறைகளில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுவது மூலம் உங்களுக்கு உதவி கிட்டும். உதாரணமாக, சிறிய விபத்து ஒன்றில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். எவ்வித காயங்களும் ஏற்படவில்லை இருப்பினும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தால் காவல்துறையின் வாடிக்கையாளர் சேவை எண்ணான 901 க்கு அழைக்கலாம்.
கொரோனா உதவி அழைப்பு எண்கள்
கொரோனா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்துகொள்ளவும், தடுப்பூசி அல்லது பரிசோதனை மேற்கொள்ள முன்பதிவு செய்யவும் இந்த எண்களைப் பயன்படுத்தலாம்.
சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் – 800 11111
அபுதாபி சுகாதாரத்துறை (எஸ்திஜாபா சேவை) – 800 1717
துபாய் சுகாதார ஆணையம் – 800 342
குற்றம்
உங்களுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேரும் விதமாகவோ அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதம் சம்பவித்தால் நீங்கள் கீழ்க்கண்ட எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
அபுதாபி காவல்துறை – அமன் சேவைக்கு 8002626 என்ற எண்ணையும் SMS வழியாக உதவியைப்பெற 8002828 என்ற எண்ணையும் அழைக்கலாம்.
துபாய் காவல்துறை – அல் அமீன் சேவைக்கு அமீரகத்திற்குள் இருந்து அழைத்தால் 8004888 என்ற எண்ணையும், அமீரகத்திற்கு வெளியே இருந்து அழைத்தால் +9718004888 என்ற எண்ணையும் பயன்படுத்தலாம்.
ஷார்ஜா காவல்துறை – நஜீத் சேவைக்கு 800151 என்ற எண்ணையும் SMS வழியாக உதவியைப்பெற 7999 என்ற எண்ணையும் அழைக்கலாம்.
உட்கட்டமைத்துறை அமைச்சகம் – 800 5000
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
உட்கட்டமைத்துறை அமைச்சகத்தின் சிறுவர் பாதுகாப்பு உதவி எண் (அமீரகம் முழுவதும்) – 116111
சமூக மேம்பாட்டு ஆணையம் (துபாய்) – 800 988
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஈவா பாதுகாப்பு இடம் (Ewa’a Shelter) – 800 7283 (வாரத்தின் 7 நாட்களிலும் காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரையில்)
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான துபாய் அறக்கட்டளை – 800 111
சிறுவர் பாதுகாப்பு மையம் (ஷார்ஜா) – 800 700
மகளிர் பாதுகாப்பு மையம் (ஷார்ஜா) – 800 800 700
ஹிமாயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அஜ்மான் அறக்கட்டளை – 800 HIMAYA (800 446292)
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அமன் மையம் (ராஸ் அல் கைமா காவல்துறை) – 07 2356666
மிருக வதை
மிருக வதைக்கு எதிராக புகாரளிக்க கீழ்க்கண்ட எண்களைப் பயன்படுத்தலாம்.
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MOCCAE) – 800 3050
துபாய் நகராட்சி – 800 900