UAE Tamil Web

மொபைல் மூலமாகவே உங்களுடைய ரெசிடென்ட் விசாவை புதுப்பித்துக்கொள்ளலாம்..! – இதை செய்தால் மட்டும் போதும்..!

visa

உங்களுடைய ரெசிடென்ட் விசாவை புதுப்பிக்க வேண்டுமெனில், வெளியே எங்கும் செல்லாமல் அதனை இணையத்தின் மூலமாகவே செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

- Advertisment -

அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய எமிரேட்களில் விசா சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கையாளும் அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையமானது (ICA) விண்ணப்பதாரர்கள் ரெசிடென்ட் விசாக்களை  இணையத்தின் மூலமே புதுப்பிக்கக்கூடிய வழிமுறையை அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.ica.gov.ae என்ற இணையமுகவரியிலும் அல்லது ‘ICA UAE’  என்ற அப்ளிகேஷனிலும் எளிமையாக பூர்த்தி செய்ய முடியும் என ஐ.சி.ஏ (ICA) தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஐ.சி.ஏ (I.C.A) வின் அறிவிப்பின்படி நீங்கள் பின்பற்ற வேண்டிய படிநிலைகள்

  •  ஐக்கிய அரபு அமீரக பாஸ் (UAE PASS)-யினைக் கொண்டு ICA இணையதளத்தில் பதிவு செய்து கணக்கு ஒன்றைத் துவங்க வேண்டும் அல்லது முன்கூட்டியே பதிவு செய்திருப்பின் ‘ஸ்மார்ட் சர்வீஸ்-ல் உள் நுழைய வேண்டும்
  •  ரெசிடென்ட் விசா புதுப்பித்தல் சேவையைத் தேர்வு செய்ய வேண்டும்.
  •  விண்ணப்பத்தை தரவேற்றி, மறுபரிசீலனை செய்து மாற்றங்களை புதுப்பித்து கட்டணத் தொகையை செலுத்திவிடவும்.
  •  உங்கள் எமிரேட்ஸ் ஐடியைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்கவும்.
  •  அங்கீரிக்கப்பட்ட டெலிவரி கம்பெனியிடம் பாஸ்போர்ட்டினை ஒப்படைக்க வேண்டும்.
  •  உங்கள் பாஸ்போர்ட்டில் ரெசிடென்சி விசா (Residency Permit) ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு டெலிவரி கம்பெனி மூலம் உங்களிடம் கொண்டு சேர்க்கப்படும்

இந்நடைமுறைக்கு எத்தனை நாள் ஆகும்?

ICA தனது இணையதளத்தில், ரெசிடென்ட் விசாவைப் புதுப்பிக்க 48 மணி நேரங்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளது

தேவையான ஆவணங்கள் என்ன?

ஸ்பான்சர் செய்யும் குடும்பம் அல்லது கம்பெனியைப் பொருத்தும் விசாவின் வகையினைப் பொருத்தும் தேவையான ஆவணங்கள் சற்றே வேறுபடலாம்.

தனியார் நிறுவன ஊழியராகவோ (அ) அல்லது ஃப்ரீ சோன் ஊழியராகவோ இருப்பின் மற்றும் உங்கள் குடும்பத்திற்கான ரெசிடென்ட் விசாவைப் புதுப்பிக்கிறீர்கள் எனில் கீழ்வரும் ஆவணங்களை நீங்கள் சமர்பிக்க வேண்டும்.

  • ஸ்பான்சர் பெறும் நபரின் வெள்ளை பின்புறத்தில் எடுக்கப்பட்ட சமீபத்திய வண்ணப்புகைப்படம்.
  • பாஸ்போர்ட் நகல்.
  • 18 வயதுக்கு மேற்பட்டவர் எனில் சம்பந்தப்பட்ட துறையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்.
  • எமிரேட்ஸ் ஐடியின் விண்ணப்ப ரசீது.
  • பணி ஒப்பந்தம்.
  • தங்குமிட ஒப்பந்தம் (சான்றளிக்கப்பட்ட) அல்லது ஆதரவாளரின் தங்குமிட உரிமை சான்றிதழ்.
  • சரியான வசிப்பிடத்தினை கொண்டுள்ள ஆதரவாளரின் பாஸ்போர்ட் நகல்.
  • மருத்துவக் காப்பீடு. (அபுதாபி விசாவாக இருப்பின்)

தகவல்களைக் கவனமாக உள்ளீடு செய்யவும்

தனது சமூக ஊடக அறிவிப்பில் ICA, விண்ணப்பதாரர்கள் தாங்கள் உள்ளீடு செய்யும் தகவல்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.

  • நீங்கள் வழங்கும் தகவல்கள் சரியாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
  • புதுப்பிக்கவோ மற்றும் வேறொன்றினை பெறுவதற்கோ நீங்கள் உள்ளிடும் உங்களின் எமிரேட்ஸ் ஐடி எண் மற்றும் காலாவதி தேதியும் சரியானதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
  • கட்டணம் செலுத்துவதற்கு முன்னர், டிஜிட்டல் விண்ணப்பத்தில் நீங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். எனவே உங்கள் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்யும்போது ஏற்படும் தேவையற்ற கால விரயத்தைத் தவிர்க்கமுடியும்.
  • துல்லியமான தகவல்களை உள்ளீடு செய்வதால் உங்கள் விண்ணப்பம், குறித்த கால நேரத்தில் பரிசீலனை செய்யப்படுவதை உறுதி செய்யமுடியும்.
  • டிஜிட்டல் விண்ணப்பத்தில் நீங்கள் உள்ளிட்ட தரவுகள் (எ.கா. போன் நம்பர், இ-மெயில் முகவரி, டெலிவரி செய்யும் முறை) சரியானதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் உள்ளீடும் தரவுகள் ஐ.சி.ஏ வால் பரிசீலித்து சரிபார்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.