UAE Tamil Web

கொரோனா தடுப்பூசியின் முதல் டோசைப் பெற்ற பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் – சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்..!

vaccine trial

கொரோனா தடுப்பூசியின் முதல் டோசைப் பெற்றுகொண்டதற்குப் பின்னர், கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்? இரண்டாவது டோசை பெறலாமா? எப்போது பெறவேண்டும்? என அமீரக சுகாதார அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய அபுதாபி பொது சுகாதார மையத்தின் பரவும் நோய்களுக்கான துறைத் தலைவரும், அமீரக சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளருமான டாக்டர். ஃபரிதா அல் ஹோசாணி,” கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில், அவர் அதிலிருந்து முழுவதும் குணமாகி நோயெதிர்ப்பு சக்தி பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனடிப்படையிலேயே இரண்டாவது டோசை பெறலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்” என்றார்.

துபாய் சுகாதார ஆணையத்தின் சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வித்துறையின் தலைவர் டாக்டர். ஹின்ட் அல் அவாதி இதுகுறித்துப் பேசுகையில்,” பைசர்- பையோஎன்டெக், சினோபார்ம், ஆக்ஸ்போர்ட்- ஆஸ்ட்ரா செனக்கா போன்ற கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்ட நபர்கள், அதன்பின்னர் நோய்த் தொற்றுக்கு உட்பட்டால், அவர் முழுமையாக குணமடையும்வரை காத்திருத்தல் வேண்டும். 10 நாட்கள் முதல் சூழ்நிலையைப் பொறுத்து கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கிய பிறகு இரண்டாவது டோசைப் பெற்றுக்கொள்ளலாம். இதன்காரணமாக இரண்டாம் டோசைப் பெற்றுகொள்வதில் காலதாமதம் ஏற்படுவதில் பிழையேதுமில்லை. ஆனால் மருத்துவர் அறிவுரை இல்லாமல் இரண்டாவது டோசைப் பெறுதல் கூடாது” என்றார்.

கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், மிதமான மற்றும் அதீத கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்போர் மருத்துவக் குழுவின் பரிந்துரை இல்லாமல் கொரோனா இரண்டாம் டோசைப் பெறுதல் வேண்டாம் என அவாதி தெரிவித்தார்.

நோயெதிர்ப்பு சக்தி பரிசோதனையை

எங்கே மேற்கொள்வது?

கீழ்க்கண்ட இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொரோனா ஆண்டிபாடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆஸ்டர் கிளினிக் 

இங்கே இருவகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  1. ஆண்டி SARS-COV-2 டோட்டல் (Nucleocapsid Detection)

கட்டணம்: 150 திர்ஹம்ஸ்.

2. ஆண்டி SARS-COV-2 டோட்டல் (Spike protein)

கட்டணம்: 250 திர்ஹம்ஸ்.

 

  • ஆஸ்டர் டையகனாஸ்டிக் ஷார்ஜா
  • ஆஸ்டர் கிளினிக் அல் நஹ்தா, ஷார்ஜா
  • ஆஸ்டர் கிளினிக் பி 2 பி (அல் நஹ்தா லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு அருகில்)
  • ஆஸ்டர் கிளினிக் அபு ஷகாரா
  • ஆஸ்டர் கிளினிக் முவைலா
  • ஆஸ்டர் கிளினிக் அபுடினா
  • ஆஸ்டர் கிளினிக் அஜ்மான்
  • ஆஸ்டர் கிளினிக் அஜ்மான் ஸ்பெஷாலிட்டி
  • ஆஸ்டர் கிளினிக் கிங் பைசல்
  • ஆஸ்டர் கிளினிக் RAK
  • ஆஸ்டர் கிளினிக் புஜைரா
  • ஆக்செஸ் கிளினிக் ரோலா
  • ஆக்செஸ் கிளினிக் முவைலா
  • ஆக்செஸ் மருத்துவமனை அஜ்மான்

 

மெட்கேர் மருத்துவமனை, ஷார்ஜா

IgG (Immunoglobulin G) கொரோனா ஆண்டிபாடி பரிசோதனை.

கட்டணம்: 79 திர்ஹம்ஸ்.

பிரைம் ஹெல்த்கேர் குரூப்

கோவிட் டோட்டல் ஆண்டிபாடி டெஸ்ட்.

கட்டணம்: 120 திர்ஹம்ஸ்.

அமைவிடங்கள்

  • பிரைம் மருத்துவமனை, அல் கர்ஹவுட்.
  • பிரைம் மெடிக்கல் சென்டர், ரீஃப் மால்.
  • பிரீமியர் நோயறிதல் மையம், தேரா.
  • பிரைம் மருத்துவ மையம், அரேபியன் செண்டர்.
  • பிரைம் மெடிக்கல் சென்டர், அல் வர்கா சிட்டி மால்.
  • பிரைம் மருத்துவ மையம், புர்ஜுமான் மையம், புர் துபாய்.
  • பிரைம் மருத்துவ மையம், ஜுமேரா, அல் வாஸ்ல் சாலை, அல் ஃபெர்டஸ் கட்டிடம்.
  • பிரைம் மருத்துவ மையம், ஷேக் சயீத் சாலை, இப்ரி ஹவுஸ்.
  • பிரைம் மெடிக்கல் சென்டர், பார்ஷா ஹைட்ஸ், ஓனிக்ஸ் டவர்.
  • பிரைம் மெடிக்கல் சென்டர், மோட்டார் சிட்டி, ஃபர்ஸ்ட் அவென்யூ மால்.
  • பிரைம் மருத்துவ மையம், அல் நஹ்தா, அல் ரோதா டவர்.
  • பிரைம் சிறப்பு மருத்துவ மையம், அல் மஜாஸ், சஃபீர் மார்கெட், கிங் பைசல் சாலை.
  • பிரைம் மருத்துவ மையம், அல் காசிமியா, பெல் ரஷீத் கட்டிடம்.
  • பிரைம் சிறப்பு மருத்துவ மையம், ஜுரைனா (06 மால்).
  • பிரைம் மெடிக்கல் சென்டர், அஜ்மான், கிராண்ட் மால்.
vaccine trial
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap