UAE Tamil Web

அமீரகத்தில் போன் நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவது எப்படி? – படிப்படியான வழிமுறைகள்..!

Mobile-applications_

நீங்கள் விரும்பும் உங்களுடைய தற்போதைய மொபைல் எண்ணைத் தக்கவைத்துக் கொள்வதோடு பிற நெட்வொர்க் வழங்கும் சிறந்த சேவைக்கான திட்டங்களையும் பெற வேண்டுமா? இதோ, இனி மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி Mobile Number Portability (MNP) வசதிமூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நுகர்வோர்கள், அதே எண்ணிலேயே வேறு சேவை நிறுவனங்களுக்கு மாற முடியும்.

போர்ட்டிங் சேவையானது ஐக்கிய அரபு அமீரகத்தில் 2013 ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. எதிசலாட் (Etisalat) மற்றும் டூ (Du) இரண்டு பெரும் தொலைதொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள்
சர்வதேச அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் பெறவோ அல்லது சிறந்த இன்டர்நெட் சேவைகளுக்காகவோ ஒரு நிறுவனத்தின் சேவையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதை மிகவும் எளிதாக்கி விட்டன

ஒரு சேவை நிறுவனத்திடமிருந்து மற்றொன்றிற்கு மாறுவதற்கு எந்த வித கட்டணமும் இல்லை. ஆனால் மாற்றத்திற்கு முன்னர் நீங்கள் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.

1.சேவை நிறுவனத்துடன் நீங்கள் கான்ட்ராக்ட் திட்டம் வைத்துள்ளீர்கள் எனில் முன்கூட்டியே திட்டத்தை முறிப்பதற்கான கட்டணத்தை தெரிந்துகொள்ள வேண்டும். தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் Telecommunications Regulatory Authority (TRA) அறிவிப்பின்படி, உங்கள் கான்ட்ராக்ட் முடிவடைய எத்தனை மாதங்கள் மீதமிருந்தாலும் முன்கூட்டியே ஒப்பந்தத்தை முறிக்க ஒரு மாத சேவைக்கான தொகையை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

2. நீங்கள் ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர் எனில் வேறொரு சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கு முன்பு உங்களுடைய தற்போதைய பேலன்ஸை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என TRA அறிவுறுத்தியுள்ளது.

3. உங்கள் சேவை நிறுவனத்திடமிருந்து உங்களுடைய மொபைல் போனை நீங்கள் கான்ட்ராக்ட் முறையில் வாங்கியிருந்தீர்கள் எனில் அதற்கான மீதத்தொகை ஏதேனும் இருப்பின் அதை முழுவதும் செலுத்தியாக வேண்டும்.

Du வில் இருந்து Etisalat சேவைக்கு மாறுவதற்கு

போர்ட் (Port) நம்பரை பெற நீங்கள் ஏதேனும் Etisalat சேவை மையத்தை அணுகி விண்ணப்பப் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டிவரும். விண்ணப்பப் படிவம் இந்த https://www.etisalat.ae/en/c/mobile/switch-to-etisalat-mobile.jsp இணையத்திலேயே கிடைக்கின்றது.

கட்டணம்: எந்த வித சேவைக்கட்டணமும் இல்லை.

தேவையான ஆவணங்கள்

1. செல்லத்தக்க எமிரேட்ஸ் ஐடி.

உங்களுடையது போஸ்ட் பெய்ட் திட்டம் எனில் பின்வரும் ஏதேனும் ஒரு ஆவணத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

 • முத்திரையிடப்பட்ட வருமான சான்றிதழ்.
 • வாகன உரிமம்.
 • தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கான வங்கி /இணைய வங்கி அறிக்கை.
 • உங்கள் முகவரிக்கான சென்ற மாத யூடிலிட்டி ரசீது
 • வாடகை/ உரிமைக்கான ஒப்பந்தம்
 • தொழிலாளர் அமைச்சகத்தின் ஒப்பந்தம்

எவ்வளவு காலம் ஆகும்?

வேறு சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கு ஒரு வேலை நாள் மட்டுமே ஆகும். போர்ட் (Port) எண்ணிற்கு விண்ணப்பித்தவுடன் உங்களுக்கு புதிய சிம் கார்டு வழங்கப்படும். அந்த எண்ணாணது Etisalat க்கு மாறிய உடன் பழைய சிம் கார்டை அகற்றிவிட்டு புதிய சிம் கார்டை பொருத்தி மொபைல் ஃபோனை ரீஸ்டார்ட் செய்தால் போதுமானது.

Etisalat லிருந்து Du சேவைக்கு மாறுவதற்கு நீங்கள் பின்வரும் ஏதேனும் ஒரு இடத்தில் விண்ணப்பிக்கலாம்

1.Du மையம்

2.Du விடம் அங்கீகாரம் பெற்ற பிற மையங்கள்

3. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க – https://www.du.ae/personal

கட்டணம்

போர்ட்டிற்க்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை. எனினும் ப்ரீ-பெய்டு திட்டமெனில் நீங்கள் ஒருமுறை ஆக்டிவேசன் கட்டணமாக 20 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டியிருக்கும். போஸ்ட்-பெய்ட் திட்டங்களுக்கு அத்தகைய ஆக்டிவேஷன் கட்டணங்கள் கிடையாது.

தேவையான ஆவணங்கள்

1. பாஸ்போர்ட்டுடன் முறையான விசா அல்லது எமிரேட்ஸ் ஐடி.

2. போஸ்ட் பெய்ட் திட்டம் எனில், பின்வரும் ஏதேனும் ஒரு ஆவணத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

 • ஐக்கிய அரபு அமீரக கிரெடிட் கார்டு.
 • சென்ற மாத யூடிலிட்டி ரசீது.
 • தற்போதைய குடியிருப்பு ஒப்பந்தம்.
 • வருமான சான்றிதழ்.
 • கையொப்பம் மற்றும் முத்திரையிட்ட தற்போதைய சம்பள ரசீது.

இணையத்தில் உங்கள் விண்ணப்பத்தை சமர்பித்த ஒரு வேலை நாளிலேயே உங்களுடைய தற்போதைய மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும்.

உங்கள் இருப்பிடத்திற்கு புதிய Du சிம் கார்டு அனுப்பி வைக்கப்படும். உங்களுடைய தற்போதைய எமிரேட்ஸ் ஐடியை சரிபார்ப்புக்காக அப்போது காண்பிக்க வேண்டியிருக்கும்.

Mobile-applications_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap