ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கான சிறந்த இணையதளங்களின் பட்டியல் பின்வருமாறு:
Amazon
“SOUQ” ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் தான் தற்போது “Amazon.com”. ஆம்! “SOUQ” நிறுவனத்தை கடந்த 2017ம் ஆண்டு “Amazon” நிறுவனம் வாங்கிவிட்டது.
எல்லா பொருட்களும் ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் வாங்கவேண்டுமென்றால் அது அமேசான் என்றே சொல்லலாம். அமேசான் இணையதளம் மூலம் நீங்கள் ஆடைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள், மொபைல்ஸ், லேப்டாப் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், புத்தகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல எண்ணற்ற பொருட்களை குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம்.
உங்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வரை இங்கே உண்டு.
Noon
அமீரகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் என்றே சொல்லலாம். இந்த இணையதளம் மூலம் மொபைல்ஸ், லேப்டாப் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆடைகள், அழகு சாதன பொருட்கள், கைக்கடிகாரங்கள், காலணிகள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், மளிகை பொருட்கள் வரை அனைத்தும் இங்கே சிறந்த விலையில் வாங்கலாம்.
Letstango
மொபைல் போன்ஸ், லேப்டாப்ஸ் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கேமராக்கள், விளையாட்டு உபகரணங்கள், அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏற்ற இணையதளம்.
Letstango – துபாயின் ஒரு சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் என்றும் அழைக்கப்படுகிறது.
Brands for Less
தரமான பிராண்டட் பொருட்கள் மிக குறைவான விலையில் வாங்க வேண்டும் என்றால் அது “Brands for Less” கடையில் என்றே சொல்லலாம்.
இவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, லெபனான், குவைத், ஏமன் மற்றும் கத்தார் நாடுகளில் சுமார் 30 கடைகள் உள்ளது. எனினும், “Brands For Less” பிரேத்யேகமான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமும் உள்ளது.
அந்த இணையதளம் மூலம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உடைகள், பேக்ஸ் (Bags) மற்றும் பல அழகு சாதன பொருட்களை மிகக்குறைவான விலையில் வாங்கிக்கொள்ளலாம்.
Splash Fashions
அமீரகத்தில் வசிப்பவர்கள் பலருக்கு பரிச்சயப்பட்ட பெயர் “Splash Fashions”. அமீரகத்தில் மற்றும் பல்வேறு நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் இவர்களுக்கு உள்ளது.
Splash Fashions ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் மூலம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உடைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள், கண்ணாடிகள் மற்றும் பல அழகு சாதன பொருட்கள் வாங்க மிகச்சிறந்த இடம்.
வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புத்தம் புதிய கலெக்சன்சன்ஸ்களை அறிமுகப்படுத்துவதில் “Splash Fashions” தனித்துவமான இடம் பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Shein
பெண்களுக்கான உடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் வாங்க சிறந்த இணையதளம். எனினும், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உடைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள் (shoes) மற்றும் பல அழகு சாதன பொருட்களும் இங்கே உண்டு.
GAP
ஆடைகளுக்கான பிரத்தியேக ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் என்றே கூறலாம். இந்த இணையதளம் மூலம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகளை குறைந்த விலையில் வாங்கலாம்.
இது ஆடைகளுக்கான பிரத்யேகமான இணையதளம் என்பதால், மற்ற ஷாப்பிங் இணையதளங்களில் இருக்கின்ற ஆடைகளை விட பல மடங்கு புதிய கலெக்சன்க்சன்ஸ், டிசைன்கள் இங்கே உண்டு.
Ace UAE
இங்கே உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து வகையான பர்னிச்சர்ஸ், சமயலறைக்கு தேவையான உபகரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் உபகரணங்கள், ஹார்டுவேர் பொருட்கள் மற்றும் பல எண்ணற்ற கருவிகளை மிக குறைந்த விலையில் வாங்கலாம்.
மேலும், உங்கள் கார்களை (Cars) சுத்தம் செய்ய பயன்படும் கருவிகள், இருக்கைகள் மற்றும் பல பொருட்களும் குறைந்த விலையில் வாங்க ஒரு சிறந்த இணையதளம்.
Mamas & Papas
இது பெற்றோர்களுக்கான (Parents) பிரத்யேக இணையதளம். இந்த இணையதளம் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி கொள்ளலாம். மேலும், பெண்களுக்கு கர்ப்ப நேரத்தில் தேவைப்படும் சில பொருட்களும் இங்கே உண்டு.
அமீரகத்தில் Mamas & Papas 6 கடைகள் உள்ளது. அங்கு நீங்கள் நேரடியாக சென்றும் பொருட்களை வாங்கலாம்.
Mumz World
இதுவும் பெற்றோர்களுக்கான (Parents) பிரத்யேக இணையதளம் தான். இந்த இணையதளம் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி கொள்ளலாம். மேலும், பெண்களுக்கு கர்ப்ப நேரத்தில் தேவைப்படும் சில பொருட்களும் இங்கே உண்டு.
உங்கள் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை கடைகளில் தேடி அலையாமல், இங்கே சுலபாக கண்டறிந்து வாங்கிக்கொள்ளலாம். நேரம் மற்றும் பணத்தை சேமிக்க ஒரு எளிய வழி.
Sprii
பெற்றோர்களுக்கான (Parents) பிரத்யேக இணையதளங்களில் முன்னணி இணையதளம் ஆகும். இந்த இணையதளம் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் மற்றும் சில வீட்டு உபயோக பொருட்களும் வாங்குவதற்கு ஏற்ற இணையதளம்.
மேலும், பெண்களுக்கு கர்ப்ப நேரத்தில் தேவைப்படும் சில பொருட்களும் இங்கே உண்டு.
Baby Store
பெற்றோர்களுக்கான பிரத்யேக இணையதளங்களில் இதுவும் ஒன்று. இந்த இணையதளம் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான உடைகள், பொம்பைகள் மற்றும் பல அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஏற்ற இணையதளம்.
மேலும், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பேக்ஸ் (Bags) மற்றும் பல பொருட்களும் இங்கே உண்டு.
இந்த பதிவின் மூலம் அமீரகத்தில் இருக்கும் சிறந்த இணையதளங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
வருங்காலங்களில் அமீரகத்தில் புதிதாக வரும் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களையும் இதே பதிவில் சேர்ப்போம். எனவே, இதன் மூலம் அமீரகத்தின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களின் பட்டியலை இதே பதிவில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு பிடித்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் எது? என்பதை Comment செய்யுங்கள்.