34.1 C
Dubai
September 27, 2020
UAE Tamil Web

Etisalat & Du நெட்ஒர்க்குகளின் தேவையற்ற விளம்பர அழைப்புகள் தொந்தரவு செய்கிறதா? இதோ தீர்வு!

Block Marketing Calls

நாம் பணியில் இருக்கும்போதோ அல்லது உறக்கத்தில் இருக்கும்போதோ பல நேரங்களில் நாம் பயன்படுத்தும் நெட்ஒர்க் கம்பெனிகளான “Etisalat” அல்லது “Du” மூலம் விளம்பர சம்பந்தமான அழைப்புகள் நமக்கு வருவதுண்டு. இது சிலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், பலருக்கு வெறுப்பாகவும் இருக்கும்.

இதற்காகவே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRA) பயனாளர்கள் வசதிக்கு ஏற்ப விளம்பர கால்களை முடக்கும் சலுகையை வழங்கியுள்ளது. இது சம்பந்தமாக அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் TRA கூறியுள்ளது.

விளம்பர கால்களை தவிர்க்க:

Etisalat வாடிக்கையாளர்கள்: ‘DNC’ என டைப் செய்து 1451 என்ற நம்பருக்கு SMS செய்யவும்.

Du வாடிக்கையாளர்கள்: எதுவும் டைப் செய்யாமல் (Blank) 5293 என்ற நம்பருக்கு SMS செய்யவும்.

இந்த தகவலை UAE-ல் வசிக்கும் உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு ஷேர் செய்துகொள்ளுங்கள். மேலும் பல பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள “UAE Tamil Web” வலைத்தளத்தோடு இணைந்திருங்கள்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!