பொதுவாக வெளிநாடுகளில் இருந்து UAE-ல் வசித்து வருபவர்கள் சிலர் வங்கி கணக்கு துவங்காமல் அல்லது வங்கி கணக்கு துவங்க கேட்கும் ஆவணங்களான சம்பள சான்றிதழ்(Salary Certificate), NOC கேட்பதால் கடினம் என்று இருந்திருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்ககிட்ட எமிரேட்ஸ் ஐடி(Emirates ID) மற்றும் ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் இருந்தால் போதும், சுலபமா வங்கி கணக்கு துவங்கலாம்.
UAE-ல் இயங்கி வரும் வங்கியான எமிரேட்ஸ் என்பிடி(EMIRATES NBD) வங்கியானது அனைத்து மக்களும் எளிதாக வங்கி கணக்கு துவங்குவதற்காக ஒரு எளிமையான முறையை அறிமுகம் செய்துள்ளது.
வங்கி கணக்கு துவக்க உங்களிடம் இருக்க வேண்டியவை:
- ஸ்மார்ட் போன். (Smart Phone)
- உங்களுக்கான மொபைல் நம்பர். (Mobile Number)
- எமிரேட்ஸ் ஐடி (Emirates ID)
குறிப்பு: 18 வயதுடையவர்கள் மற்றும் யாரிடமெல்லாம் ‘EMIRATES ID’ உள்ளதோ அவர்கள் மட்டுமே இந்த முறையில் வங்கி கணக்கு துவங்க முடியும்.
பின்பற்ற வேண்டியவை:
Step 1: முதலில் “Liv App” அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும்.
Step 2: உங்கள் பெயர், பிறந்த நாள், போன் நம்பர் மற்றும் சில தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
Step 3: உங்களின் எமிரேட்ஸ் ஐடியை (EMIRATES ID) முன் பின் புகைப்படம் எடுத்து பகிர வேண்டும்.
அவ்வளவுதான் நீங்கள் செய்யவேண்டியது. நீங்கள் வெற்றிகரமாக உங்களுக்கான வங்கி கணக்கை துவங்கி வீட்டீர்கள். உங்களுக்கான எடிம் கார்டை (ATM Card) நீங்கள் கொடுத்த முகவரிக்கு தேடிவரும்.
இந்த எடிம் கார்டை (ATM Card) நீங்கள் பயன்படுத்தி ஷாப்பிங் தொடங்கி உங்கள் ஊரிற்கு பணம் அனுப்பும் வரை அனைத்தும் செய்யலாம்.
முதன் முதலில் உங்களுக்கான ATM கார்டை இலவசமாக உங்கள் இடம் தேடிவந்து தருவார்கள் என்பதும் ஒரு நல்ல செய்தி.
மேலும், லிவ் அப்ளிகேஷன் (Liv App) யாரெல்லாம் இலவசமாக பயன்படுத்தலாம்? யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும்? மற்றும் பல விவரங்கள் கீழே கொடுப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Image Source: Liv Price Plan (https://www.liv.me/liv-en/charges/)