சமூக வலைதளங்களில் செய்வதும், செய்யக்கூடாததும்.!

social media

இன்றைய காலத்தில் பல்வேறு நபர்களின் வாழ்க்கை நீதிமன்றத்தில் கேள்விக்குறியாக இருப்பதற்கு மூலக்காரணம் வாட்ஸாப்ப் என்னும் சாபம் ஆகும். தனிநபர்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட வாட்ஸாப்ப் இன்றைக்கு ஒரு பேரழிவாக மாறி, தவறான செயல்கள் செய்வதில் பலரை இரையாக்கி, கடைசியில் நீதிமன்றம் வரையிலும் கொண்டு செல்கிறது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஆதாரத்தோடு நிரூபணமான ஒரு குற்றச்சாட்டாகும்.

வழக்கறிஞர் அலி மன்சூரியின் கருத்துப்படி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, அமீரகத்தின் மத்திய சட்டத்திற்கு உட்பட்ட தண்டனைகளுக்கு வழிவகுக்கும். பிறருக்கு இழிவு விளைவிக்கும் வகையில் செய்யும் தகவல் தொழில்நுட்ப குற்றங்கள் நிரூபிக்கப்படுமேயானால், ஆர்ட்டிகள் 20 ன் படி இக்குற்றத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு மூன்றாம் நபர் உள்பட 2,50,000 திர்ஹம்ஸ் முதல் 5,00,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் மற்றும் குறிப்பிட்ட சிலகால சிறைவாசமும் வழங்கப்படும்.

எஸ்.டி.ஏ சட்ட நிறுவனத்தின் பங்குதாரர் சுனில் தாக்கரின் கூற்றுப்படி, ஆன்லைனில் ஏதேனும் பதிவிடும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் பின்வருமாறு:

இரகசியத்தன்மை

personal data scam

செய்யக்கூடாதவை:

தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் ரகசிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் உரையாடுவது. இக்குற்றம் நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு தற்காலிக சிறைவாசம் அல்லது அபராதம் வழங்கப்படும்.

செய்யவேண்டியவை:

உங்களிடம் பகிரப்பட்ட ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது ஒரு நிறுவனத்தின் ரகசிய தகவல்களை யாருடனும் சமூகவலைத்தளங்களில் பகிரக்கூடாது.

அவதூறு

defamation

செய்யக்கூடாதவை:

ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் மீது அவமானம்  ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் அவதூறான அறிக்கைகளை ஒருபோதும் சமூக ஊடகங்களில் வெளியிடக்கூடாது. இக்குற்றம், பிரிவு 372 சட்டத்தின் கீழ் தண்டனைக்குற்பட்டதாகும்.

செய்யவேண்டியவை:

ஆன்லைனில் ஏதேனும் பதிவிடும்போது அந்த தகவல்கள் யாரையும் இழிவுபடுத்தாத வகையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

புகைப்படங்கள்

photographies

செய்யக்கூடாதவை:

அடுத்தவர்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிடுவது அல்லது அவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து வெளியிடுவது ஆகியவை பெரும் குற்றமாகும். இப்படிப்பட்ட குற்றவாளிகளின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்கு அமீரக அரசு பல சட்டதிட்டங்கள் வைத்துள்ளது.

செய்யவேண்டியவை:

உங்கள் சமூக ஊடகங்களில் மற்றொருவரின் புகைப்படத்தை வெளியிட விரும்பினால் அவரின் சம்மதத்தை எழுத்து ஒப்புதல் மூலம் பெறுதல் அவசியம்.

நீதிநெறி

morality

செய்யக்கூடாதவை :

நாட்டின் பிரதிநிதிகளை கேலி செய்வது, பிற மதத்திற்கு எதிராக மோசமான கருத்துக்களை ஆன்லைனில் பதிவு செய்வது. இது போன்ற குற்றத்திற்கு ஐக்கிய அரபு அமீரக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 361 ஐ ஊக்குவிப்பதன் மூலம், குறைந்தது 6 மாத சிறைத்தண்டனை அல்லது 5000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

செய்யவேண்டியவை:

பிற மதங்களின் கருத்துக்களை மதிக்கும் வண்ணமும் பிற தேசிய அமைப்புகளை கேலி செய்யாத வண்ணமும் நீங்கள் வெளியிட நினைக்கும் பதிவு இருத்தல் அவசியம்.

தண்டனைகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சைபர் குற்றங்களுக்கு எதிரான தெளிவான மற்றும் கடுமையான சட்டங்கள் மற்றும்  பல்வேறு தண்டனைகளை உள்ளடக்கியது, இதில் நீண்டகால சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் டாலர் அபராதம் ஆகியவை அடங்கும். ஆகவே, ஒரு செய்தியை ஆன்லைனில் பதிவிடும் போது அதன் உண்மைத்தரம், அடுத்தரவரின் மனதைபுண்படுத்தாமல் இருத்தல் மற்றும் தீவிரவாதத்தை தூண்டாமல் இருப்பது ஆகியவையை மனதிற்கொண்டு பதிவிடுவது ஒரு சிறந்த முடிவாகும்.

Loading...