UAE Tamil Web

அபுதாபியில் NONSTOP பேருந்து சேவை அறிமுகம்.. பயணிப்பது எப்படி

அபுதாபியில் எக்ஸ்பிரஸ் எனும் புதிய பேருந்து சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட இருப்பதாக போக்குவரத்து மையம் அறிவித்துள்ளது.

திங்கள்கிழமை 14 தேதி முதல் அபுதாபியில் விரைவான பேருந்து போக்குவரத்தான NONSTOP பேருந்து சேவை வழங்கப்படும் என்று நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமான (ITC) தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகிய முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நிறுத்தமில்லாத பேருந்து சேவை அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய சேவை இரண்டு கட்டங்களாக பயணிகளுக்கு உதவும் என கூறப்பட்டுள்ளது.

  1. Mussafah Industrial Area மற்றும்  Mohamed Bin Zayed City உள்ளடக்கும்.
  2. கலிஃபா சிட்டி, பனியாஸ், அல் ஷஹாமா, அல் ஃபலாஹ் என பயணிகளின் விருப்பத்திற்கேற்ப இந்த பகுதிகளை நேரடியாக அபுதாபி சிட்டியுடன் இணைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வாரமும் 680 பயணங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் வார நாட்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மற்ற நேரங்களில் ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் இடையே செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கும் ITC மற்றும் தனியார் துறைக்கு இடையே கூட்டுறவின் ஒரு பகுதியாக, Al Ghazl Transport Company மற்றும் எமிரேட்ஸ் டாக்ஸி மூலம் முதல் கட்டமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சேவையை வழங்குவதற்காக நிறுவனங்கள் 64 பேருந்துகளை வாங்கியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap