UAE Tamil Web

குழந்தைகளை சீண்டினால் கடும் நடவடிக்கை – 50,000 திர்ஹம்ஸ் அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை!

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாக்க அமீரக அரசு பல்வேறு செயல்திட்டங்களை வகுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் துபாயின் குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்புத் துறைக்கு 103 புகார்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாளான வழக்கில் பெற்றோர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களாலேயே குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோருக்கு வதீமா சட்டம் 69 பிரிவின் கீழ் குற்றவாளிக்கு 50,000 திர்ஹம்ஸ் அபராதத்துடன் சிறைத்தண்டனை விதிக்க நேரிடும் என அமீரக வழக்கறிஞர் ஆஷிஷ் மேத்தா எச்சரித்துள்ளார். குழந்தைகளை மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக அரசு எச்சரித்துள்ளது.

 

0 Shares
Share via
Copy link