UAE Tamil Web

வாட்சாப் மூலமாக பிச்சை எடுத்த நபர் – கடுப்பான காவல்துறை..!

Police

பிரபல சமூக வலைத்தளமான வாட்சாப் மூலமாக பிச்சை எடுத்த நபர் ஒருவரை துபாய் காவல்துறை கைதுசெய்திருக்கிறது. விசாரித்ததில் வாட்சாப் மட்டுமல்லாது பிற சமூக வலைதளங்களிலும் அவருக்கு “கணக்கு” இருப்பது தெரியவந்திருக்கிறது.

துபாய் காவல்துறையின் ஊடுருவல் தடுப்புப் பிரிவின் தலைவர் கர்னல் அலி சலீம்,” தனக்கு வேலை போய்விட்டதாகவும், தன்னுடைய குடும்பத்தில் 9 பேர் இருப்பதாகவும் தனக்கு உதவும்படியும் அந்நபர் பல பேருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்” என்றார்.

பொதுமக்கள் இம்மாதிரியான சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை குறிப்பாக ரமலான் மாதத்தில் பரப்பப்படும் செய்திகளை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என சலீம் தெரிவித்தார்.

“ரமலான் மாதத்தில் மக்களின் இரக்கத்தை பிச்சைக்காரர்கள் உபயோகித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உண்மையாகவே உதவி தேவைப்படும் நபர்களுக்கு வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்துவருகின்றனர். அவர்களுக்கு புதிய வேலைகளுக்கான பயிற்சியையும் அளிக்கின்றன” என சலீம் தெரிவித்தார்.

Police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap