UAE Tamil Web

எமிரேட்ஸ் விமானத்தில் அச்சடிக்கப்பட்ட MUSEUM OF THE FUTURE அருங்காட்சியகம்.. உலகம் முழுவதும் சுற்றிவர முடிவு!

துபாயின் ஃபிளை எமிரேட்ஸ் A380 விமானத்தில் MUSEUM OF THE FUTURE அருங்காட்சியகம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட்டு விளம்பரப்படுத்தப்பட உள்ளது.

MUSEUM OF THE FUTURE அருங்காட்சியகத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட முதல் எமிரேட்ஸ் A380 (A6-EVK) விமானம் இன்று லாஸ் ஏஞ்சல்ஸுக்கு புறப்பட இருக்கிறது.

மேலும் வரும் வாரங்களில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் நாட்டின் முக்கிய பிராந்தியத்துக்கு செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் MUSEUM OF THE FUTURE அருங்காட்சியகத்தின் ஸ்டிக்கர் அச்சடிக்கபட்டு போக்குவரத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது, எதிர்காலத்தில் முன்னணி நகரமாக, புதுமைக்கான மையமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான சோதனைக் களமாக துபாய் மீது உலக பார்வை திரும்ப எமிரேட்ஸ் விமான நிறுவனம் முழு விச்சில் இறங்கியுள்ளது.

‘உலகின் மிக அழகான கட்டிடம்’ என்று அழைக்கப்படும் ஏழு மாடி, தூண்களற்ற, வட்ட வடிவ அருங்காட்சியகம், துபாயின் உறுதியான வடிவமைப்பு அற்புதங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் நாளைய சாத்தியக்கூறு உலகை கற்பனை செய்ய தூண்டும் கட்டிடமாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.

இந்த அருங்காட்சியகம் விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய அவர்களின் தைரியமான யோசனைகள் கொண்டுவர இந்த MUSEUM OF THE FUTURE கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap