UAE Tamil Web

ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 14 பேர் பலி!

Yemen

ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

அபுதாபியில் நேற்று நடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் தலைநகர் சனாவை குறிவைத்து, சவூதி தலைமையிலான கூட்டணி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அபுதாபுயில் முஸாஃபா பகுதி மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று காலை அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகம், இது தண்டிக்கப்படாமல் போகாது என உறுதியளித்த சில மணி நேரங்களில், சவூதி வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது.

சனாவில் விமானப்படை 24 மணி நேர வான்வழி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அங்குள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக ஹவுதி போராளி முகாம்கள் இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும் சவூதி தலைமையிலான கூட்டணி கூறியுள்ளது.

இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் படையை சேர்ந்த முக்கிய தளபதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வான்வெளி தாக்குதலை தொடர்ந்து சவுதி கூட்டுப்படை – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே மேலும் தாக்குதல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yemen
7 Shares
Share via
Copy link